Home
Computer

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய சோனி வயோ ஒய் நெட்புக்

By Super
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய சோனி வயோ ஒய் நெட்புக்
தனது வயோ ஒய் நெட்புக்கை கூடுதல் செயல்திறன் கொண்டதாக மேம்படுத்தி வயோ ஒய்பி என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வருகிறது சோனி. இதில், ஏஎம்டி இ-350 பிராசஸர் கொண்டு அட்டகாசமான செயல் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், இது 11 இஞ்ச் திரை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 1.6ஜிஹெர்ஸ் டூவல் கோர் சிபியுடன் எம்டி இ-350 ப்ராசஸர் கொண்டுள்ளது. மேலும் எஎம்டி ரேடியோன் எச்டி 6310 க்ராபிக்ஸும் கொண்டுள்ளது. பழைய வயோ ஒய் 13 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருந்தது. ஆனால் சோனி வயோ ஒய்பி 11.6 இன்ச் மட்டுமே கொண்டிருந்தாலும் இது எல்இடி பேக்லைட்டுடன் 1366X768 பிக்சல் ரிசலூசனைக் கொண்டுள்ளது.

சோனி வயோ ஒய்பி வயோ வரிசையின் டபள்யூ மாடலை ஒத்திருக்கிறது. இது மெட்டலில் வருவதால் நமது கைரேகைகள் மற்றும் கீறல்கள் இதில் விழாது. இதன் ஹார்ட்வேர் மற்றும் இதன் ரேம் இதன் அடிப்பக்கத்தில் உள்ளன.

சோனி வயோ ஒய்பி 3 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளைக் கொண்டுள்ளது. ஆனால் அது 3.0 யுஎஸ்பி போர்ட்டைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இது மீடியா போன் ஜாக்குகள், ஜிகாபிட்லேன், விஜிஎ, எஸ்டிஎச்சி கார்ட் ஸ்லாட் மற்றும் எச்டிஎம்ஐ அவுட் கொண்டுள்ளன.

இதன் கீபோர்ட் சிக்லெட் ஸ்டைலில் உள்ளது. இது டச்பேடைக் கொண்டிருப்பதால் இதன் பட்டன்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆனால் இதன் டச்பேட் மிகவும் சிறியதாக இருக்கிறது.சோனி வயோ ஒய்பின் செயல்திறனைப் பார்த்தால் அது மிக அபாரமாக உள்ளது.

அதாவது இது எஎம்டியின் பியூஷன் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் டூவல் கோர் சிபியு, ரேடியோன் க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யுனிட் மற்றும் 1ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் ஆகியவை எஎம்டி ஸகேட் இ-350 எபியுவின் பகுதியாக ஒரே ப்ராசஸரில் வைக்கப்பட்டுள்ளன.

இதன் பேட்டரி 6 மணி நேரம் தாங்கும் வலிமை கொண்டது. மேலும் இதை வெளியிலும் மற்றும் பயணத்திலும் மிகவும் சிறப்பாக எளிதாக பயன்படுத்த முடியும். இது 32-பிட் விண்டோஸ் 7 ஹோம் பிரீமியம் இயங்குதளத்தில் இயங்குகிறது.

சோனி வயோ ஒய்பி 4ஜிபி டிடிஆர்3 1066 எம்ஹெர்ட்ஸ் மெமரியையும் மற்றும் 500ஜிபி, 5400 ஆர்பிஎம் ஹச்டிடியும் கொண்டுள்ளது. இது 6 செல்லுடன் 38 வாட்ஸ் லை-யன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. ஏத்ரோஸ் 802.11பி/ஜி/என் மூலம் வயர்லஸ் இணைப்பும் கொண்டுள்ளது. இதன் எடையைப் பார்த்தால் அது 3.24 பவுண்டுகள் மட்டுமே.

சோனி வயோ ஒய்பி சோனியின் வயோ வரிசை நெட்புக்கில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இது ஒரு முழுமையான புதிய டேப்லட்டாகும். இதனுடைய விலை சற்று அதிகமாக அதாவது ரூ.26,760 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X