விரைவில் மேங்கோவின் புதிய வெர்ஷன்:மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்துகிறது

By Super
|
விரைவில் மேங்கோவின் புதிய வெர்ஷன்:மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்துகிறது
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மேங்கோ 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஓஎஸ் கொண்ட மொபைல்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மேங்கோ என்ற பெயரில் விண்டோஸ் போன் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் சமீபத்தில் அறிமுகம் செய்தது.இதன் புதிய வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை டேங்கோ என்ற பெயரில் அடுத்த மாதம் மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, தனது அப்போலோ மற்றும் விண்டோஸ் 8 ஓஎஸ் கொண்ட போன்களை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும் மேங்கோவின் அப்டேட்டான டாங்கோ விரைவில் வந்துவிடும் என்று பல தகவல்கள் உறுதியாக கூறுகின்றன. இந்த டேங்கோ ஓஸ் போன்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டேங்கோ ஓஎஸ் கொண்ட போன்கள் மலிவான விலையில் வரும் என்பதோடு, விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஓஎஸ் கொண்ட போன்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய வெர்ஷனான டேங்கோவை அப்டேட்டும் செய்துகொள்ளலாம்.

டாங்கோ போன்களைப் பற்றிய விபரங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடாமல் மவுனம் காத்து வரும் நிலையில், இந்த போன்களுக்கான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X