Home
Computer

ஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் புதிய நோட்புக்!

By Karthikeyan
ஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் புதிய நோட்புக்!

மவுஸ் கம்யூட்டர் நிறுவனம் நோட்புக் ரசிகர்களுக்கு ஒரு புதிய நற்செய்தியை வழங்க இருக்கிறது. இந்த மவுஸ் கம்யூட்டர் எல்பி-டி710பி என்ற ஒரு புதிய 17.3 இன்ச் நோட்புக்கை களமிறக்க இருக்கிறது.

கருப்பு நிறத்தில் களையாக வரும் இந்த நோட்புக் அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது. தொடு வசதி இல்லாத இதன் திரை 1920 × 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. விண்டோஸ் 64பிட் 7 ஹோம் இயங்கு தளத்தில் இயங்கு இந்த நோட்புக் இன்டல் கோர் ஐ5-2450எம் ப்ராசஸர், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் மற்றும் இன்டல் எச்எம்76 சிப்செட் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இந்த நோட்புக் மிக வேகமாக இயங்கும் திறன் கொண்டது. அதுபோல் இந்த நோட்புக் மிக உறுதியாகவும் இருக்கும்.

முகப்பு வெப்காம் மட்டும் கொண்டுவரும் இந்த நோட்புக் வீடியோ வசதியையும் கொண்டுள்ளது. இதில் இமெயில் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகளும் உண்டு. 4ஜிபி டிடிஆர்3 ரேமைக் கொண்டிருக்கும் இந்த நோட்புக்கின் சேமிப்பை மல்டி கார்டு ரீடர் மூலம் விரிவுபடுத்தவும் முடியும்.

இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்எல் ப்ரவ்சர் வசதிகளை இந்த நோட்புக் கொண்டுள்ளதால் இதில் தடையின்றி தகவல்களை மிக விரைவாக பரிமாற்றம் செய்யலாம்.

இந்த நோட்புக் சூப்பாரன பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. அதற்காக இந்த நோட்புக் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர், வீடியோ கேம்கள், அசத்தலான ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

சூப்பரான லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த நோட்புக் 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த நோட்புக்கின் விலை ரூ.50000 ஆகும். இந்த நோட்புக் தற்போது ஜப்பானில் விற்பனையாகி வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X