ரூ.10,000க்குள் மாணவர்களுக்கான டேப்லெட்: வியூவ்சோனிக் அறிமுகப்படுத்துகிறது

By Super
|
ரூ.10,000க்குள் மாணவர்களுக்கான டேப்லெட்: வியூவ்சோனிக் அறிமுகப்படுத்துகிறது
வயூசோனிக் நிறுவனம் ஒரு புதிய 7 இன்ச் அளவு கொண்ட ஆன்ட்ராய்டு டேப்லட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை ரூ.10000க்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே வியூவ்பேட் 7 என்ற டேப்லட்டை ரூ.15000க்கு வியூசோனிக் விற்பனை செய்தது. ஆனால் வரும் புதிய டேப்லட் கண்டிப்பாக மலிவு விலையில் வரும் என நம்பலாம்.

இந்த புதிய டேப்லட்டின் பெயர் வியூவ்பேட் 7இ ஆகும். இது ஆண்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீட் 2.3. இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 1ஜிஹெர்ட்ஸ் ஆர்ம் கோர்டெக்ஸ் ப்ராசஸர் கொண்டு 512எம்பி டிடிஆர்2 எஸ்டிஆர்எம் மெமரியைக் கொண்டுள்ளது. வியூவ்பேட் 7இன் டிஸ்ப்ளே 7 இன்ச் ஆகும். அதுபோல் அந்த டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 800X600 பிக்சல் ஆகும். குறிப்பாக இதை வியாபரத்தில் ஈடுபடுவோருக்காக உருவாக்கவில்லை.

வியூவ்பேட் 7இ ரெசிஸ்டிவ் தொடுதிரை வசதி கொண்டது. இந்த ரெசிஸ்டிவ் தொடுதிரை இரண்டு நெகிழும் தன்மை கொண்ட சீட்டுகளோடு இணைக்கப்பட்டு மைக்ரோடாட்டுகள் மூலம் பிரிக்கப்படுகின்றது. அதனால் இதன் தொடுதிரையை தொடும்போது இந்த 2 சீ்ட்டுகளும் அழுத்தப்படுகின்றன. அது நமது தொடுதலைப் பதிவு செய்கிறது. அது ஒரு பேசிவ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

வியூவ்சோனிக்கின் தேசிய வர்த்தக மேலாளர் கூறும் போது இந்த புதிய வீயூவ்பேட் வரிசை டேப்லட்டுகள் இந்தியாவில் ஒரு சோதனை முயற்சியாகும். மேலும் இந்த வியூவ்பேட் 7இ விரைவில் இந்திய சந்தைக்கு வந்துவிடும். குறிப்பாக இது குறைந்த விலையில் வந்து கல்வி நிறுவனங்களையும் மாணவ சமுதாயத்தையும் இது மையப்படுத்தும் என்று கூறுகிறார்.

வியூவ்பேட் 7இ 3 மெகா பிக்சல் ரியர் கேமராவையும் அதே நேரத்தில் 0.3 மெகா பிக்சல் முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறு. அதுபோல் இடிஆர் கொண்டு வைபை 802.11 பி/ஜி/என் மற்றும் ப்ளூடூத் 2.1 கொண்டிருக்கிறது. அதனால் இதில் தகவல் பரிமாற்றத்தை மிக விரைவாகச் செய்யலாம். அதுபோல் வீடியோ கேம் வசதிக்காக அடோப் ப்ளாஷ் 10.3 மற்றும் வெப் மீடியா மற்றும் வீடியோ ஸ்டீமிங் கொண்டுள்ளது.

வியூவ்பேட் 7இ எச்டிஎம்ஐ இணைப்பு கொண்டிருப்பதால் பெரிய திரையில் இது 1080பி வீடியோவை சப்போர்ட் செய்யும். மேலும் யுஎஸ்பி போர்ட்டும் கொண்டிருப்பதால் இதை மற்ற டிவைஸ்களோடும் இணைக்க முடியும். அதோடு 4ஜிபி இண்டர்னல் மெமரியும் கொண்டிருப்பது இதன் முக்கிய சிறப்பு ஆகும். அடுத்ததாக இது மைக்ரோஎஸ்டி கார்டு கொண்டிருப்பதால் இதன் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். விரைவில் இந்த வியூவ்பேட் 7இ வரும் என நம்புவோம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X