நவீன அம்சங்களுடன் ஸ்டைலிஷ் லேப்டாப்: தோஷிபா அறிமுகப்படுத்துகிறது

Posted By: Staff

நவீன அம்சங்களுடன் ஸ்டைலிஷ் லேப்டாப்: தோஷிபா அறிமுகப்படுத்துகிறது
தோஷிபா புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய அதே நேரத்தில் படு ஸ்டைலான் தோஷிபா சி660 என்ற புதிய லேப்டாப்பை களமிறக்குகிறது.

இந்த தோஷிபா சி660 கட்டிங் எட்ஜ் கொண்டு வருகிறது. இதன் ட்ராக்பேட் அதி நவீனமானது. மொத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால் இது பழைய மாடல் போன்று இருந்தாலும் ஏராளமான புதிய வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இதன் டிஸ்ப்ளே 1,366 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. அதனால் இதில காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கும். இதன் கீபோர்டும் மிக அழகாக வரிசையாக இருக்கிறது.

தோஷிபா சி660 டூவல் கோர் இன்டல் பென்டியம் பாரசஸர்களுடன் 3ஜிபி ரேம் கொண்டு வருகிறது. அதுபோல் இதில் வீடியோ கேம் வசதியும் பக்காவாக உள்ளது. மேலும் இதில் தடையில்லாமல் பாடல் கேட்கலாம். படம் பார்க்கலாம். இதில் டிவிடி ரைட்டரும் மற்றும் விஜிஎ அவுட்புட்டுகளும் உள்ளன.

மேலும் பல வடிவங்களில் இது யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டிருப்பதால் மற்ற டிஜிட்டல டிவைஸ்களோடு நாம் இதை எளிதாக இணைக்க முடியும். அதோடு இது 100எமபிபிஎஸ் வரை லேன் வழங்குகிறது. அதுபோல் இதன் ஸ்பீக்கர்களும் மிக அதிரடியாக இருக்கிறது.

தோஷிபா சி660ன் பேட்டரியை எடுத்துக் கொண்டால் அது 4 மணி நேரம் தாங்கக் கூடியது. அதுபோல் இந்த பேட்டரியை ஜார்ஜ் செய்ய அதிக நேரம் தேவைப்படாது.

தோஷிபா சி660 அதிக சேவைகளை வழங்கினாலும் இது ஒரு குறைந்த விலை லேப்டாப்பாகும். இதன் சேமிப்பு வசதி அதிகமாக இருப்பாதால் ஏராளமான பாடல்கள் மற்றும் வீடியோக்களை இதில் சேமிக்க முடியும். மேலும் இது எடை குறைவாக இருப்பாதால் இதை எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

குறிப்பாக குறைந்த விலை லேப்டாப்பை விரும்புபவர்கள் இந்த தோஷிபா சி660யை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் இதன் விலை ரூ.20,000 மட்டுமே.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்