அகன்ற திரையில் ஆட்டுவிக்க வரும் சோனியின் புதிய வயோ சீரிஸ்

Posted By: Staff

அகன்ற திரையில் ஆட்டுவிக்க வரும் சோனியின் புதிய வயோ சீரிஸ்
ட்ரெண்டுகளைப் புரட்டிப் போடும் சோனி வயோ லேப்டாப்புகள் புதிய வடிவில் விரைவில் வருகின்றன. குறிப்பாக வயோ சீரிஸ் வெற்றியைக் குவித்த படைப்பாகும். ஆனால் அவை அவற்றின் 13.3 இன்ச் டிஸ்ப்ளேக்களுக்காக விமர்சனம் செய்யப்பட்டன. மேலும் அவற்றின் டிஸ்ப்ளே பெரிதாக இருந்தால் அம்சமாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

அதை சோனி நிறுவனம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு தமது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வருகிறது. அதாவது இனி சோனியின் வயோ சீரிஸ் எச்டி கம்பாட்டிபிலிட்டி கொண்டு 15 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும். எச்டி வசதிக்கு பெரிய வரவேற்பு உண்டு.

புதிய சோனி வயோ சீரிஸ் அலுமினிய தகட்டில் வருவதால் இதன் எடை 4.4 பவுண்டுக்கும் குறைவாக வரும். இதன் திரை 1920 x 1080 பிக்ஸல் ரிசலூசன் கொண்டு க்ளோசி ஆண்டி ரிப்லக்டிவ் கொண்டிருக்கும். வயோ சீரிஸில் பேட்டரி லேப்டாப்பில் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.

அதனால் அது இரண்டு மடங்கான சக்தியைக் கொடுக்கும். அதாவது புதிய வயோ சீரியஸ் லேப்டாப்புகளை தொடர்ந்து 10 மணி நேரம் இயக்கலாம். அந்த அளவிற்கு அதன் பேட்டரி சக்தியைக் கொண்டிருக்கிறது.

சோனி வயோ லேப்டாப்புகள் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் வரவிருக்கிறது. இது இண்டல் கோர்ஐ7 ப்ராசஸருடன் சான்டி பிரிட்ஜ் சிப்செட் கொண்டிருக்கிறது. 1080 ரிசலூசன் முழுமையான எச்டி வீடியோவை இயக்க வேண்டுமானால் பெரிய க்ராபிக்ஸ் சப்போர்ட் வேண்டும்.

அதற்கு தேவையான எஎம்டி ரேடியோன் எச்டி 6630எம் க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்டும் 1ஜிபி வீடியோ மெமரியும் இந்த வயோ சீரிஸ் லேப்டாப்புகள் கொண்டுள்ளன. மேலும் இதன் மூலம் எச்டி வீடியோ மட்டுமல்ல, ஹை என்ட் வீடியோ கேம்களையும் விளையாட முடியும்.

மேலும் இதில் டைனமிக் ஹைபிரீட் க்ராபிக்ஸ் சிஸ்டமும் உள்ளது.

அடுத்ததாக இதன் கிராபிக்ஸில் 2 மாடல்கள் அதாவது வேகம் மற்றும் பலம் மோடுகள் உள்ளதால் இதன் ஜிபியு செயல்பாடு மிக பக்காவாக இருக்கும். மேலும் இவற்றின் கீபோர்ட் பேக்லிட்டுடன் அலுமினியத்தில் வருகிறது. அதனால் இதில் டைப் செய்வது மிக அருமையாக இருக்கும். இந்த வயோ சீரிஸ் லேப்டாப்புகள் இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.43,000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot