பீட்டெல் மேஜிக் Vs ரிலையன்ஸ் 3ஜி டேப்லெட்- ஓர் ஒப்பீட்டு அலசல்

Posted By: Staff

பீட்டெல் மேஜிக் Vs ரிலையன்ஸ் 3ஜி டேப்லெட்- ஓர் ஒப்பீட்டு அலசல்
டேப்லெட் களத்தில் பார்தி என்டர்பிரைஸஸ் குழுமம் (ஏர்டெல்) மற்றும் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தரமான டேப்லெட்டுகளை வழங்குவதில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் அவை தமது தனித்துவத்தை விட்டுக் கொடுப்பதில்லை.

பீட்டெல் மேஜிக் ஆன்ட்ராய்டு வி2.2 ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் சிறந்த 1ஜிஹச்ஸட் ப்ராஸஸரை பெற்றிருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் 3ஜி டேப் 2.3 ஆன்ட்ராய்டு ஜிஞசர்ப்ரீட் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டு ரிலையன்ஸ் 3ஜி சூப்பர் ஐபி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்கிறது.

கேமராவை பொறுத்த மட்டில் இரண்டு டேப்லெட்டுகளுமே 2 மெகா பிக்ஸல் டூவல் கேமராவையும் விஜிஎ முகப்பு கேமராவையும் கொண்டுள்ளன. டூவல் கேமரா சிறந்த வீடியோ ரிக்கார்டிங்கையும் முகப்பு கேமரா உரையாடல் வசதியையும் வழங்குகிறது.

சேமிப்பு வசதியை பொறுத்தமட்டில் ரிலையன்ஸ் 3ஜி டாப் பீட்டெல் மேஜிக்கைவிட சிறந்து விளங்குகிறது. பீட்டெல் மேஜிக் 16ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 8ஜிபி மெமரியையும் ரிலையன்ஸ் 3ஜி டாப் 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய மெமரி சேமிப்பை வழங்குகிறது.

ரிலையன்ஸ் 3ஜி டாப்பின் மிக முக்கிய சிறப்பம்சம் அதனுடைய லைவ் டிவியாகும். இதன் மூலம் விரும்பும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும். மேலும் டிவி இல்லாத இடங்களிலும் கூட இந்த டேப்லெட்டின் லைவ் டிவி மூலம் செய்திகள் மற்றும் உரையாடல் நிகழ்ச்சிகளை காண முடியும்.

இரண்டு டேப்லெட்டுகளும் அதிவிரைவு கொண்ட ப்ளூடூத் டிவைஸ் மற்றும் வைபை வசதிகளை வழங்குகின்றன. இரண்டுமே 3ஜி வசதியை கொண்டுள்ளன. மேலும் எம்பி3 ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் வீடியோ விளையாட்டு வசதிகளையும் இவற்றில் நாம் பெறலாம்.

இரண்டு டேப்லெட்டுகளும் சம அளவில் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தாலும் விலையை பொறுத்தமட்டில் ரிலையன்ஸ் 3ஜி டாப் ரூ. 12999க்கும், பீட்டெல் மேஜிக் ரூ. 8999க்கும் கிடைக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்