Home
Computer

வருகிறது சூப்பர் பாஸ்ட் புதிய ஆப்பிள் மேக்புக் லேப்டாப்!

By Karthikeyan
 வருகிறது சூப்பர் பாஸ்ட் புதிய ஆப்பிள் மேக்புக் லேப்டாப்!

ஆப்பிளின் புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் அடுத்த மாதம் வரவிருக்கிறது என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது. இந்த வதந்தி உலக அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் விற்பனையில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் இதுவரை இந்த புதிய மேக்புக்கின் விலை பற்றி எந்தவித தகவலும் வரவில்லை.

இந்த புதிய மேக்புக்கைப் பற்றி ஒரு சில தகவல்கள் மட்டுமே வந்துள்ளன. குறிப்பாக இந்த மேக்புக் இன்டல் ஐ5 அல்லது ஐ7 ப்ராசஸரைக் கொண்டு வரும் என்று தெரிகிறது. அதனால் இதன் வேகம் மிக அதிகமாக இருக்கும் என்று நம்பலாம். இதன் பேக்லிட் டிஸ்ப்ளே மிக அருமையாக இருக்கும். மேலும் இது ஒரு அடக்கமான சாதனமாகும்.

இந்த புதிய மேக்புக்கில் இருக்கும் தன்டர்போல்ட் ஐ/ஒ தொழில் நுட்பத்தின் மூலம் மிக விரைவாக தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் இதன் ஆல் ப்ளாஷ் சேமிப்பு வசதி மூலம் ஏராளமான தரவுகளை சேமிக்க உதவும். மேலும் இந்த புதிய மேக்புக்கின் பூட்டிங்கும் மிக வேகமாக இருக்கும்.

இந்த மேக்புக்கில் இருக்கும் மல்டி டச் ட்ராக்பேட் மூலம் 3 விரல் மற்றும் 4 விரல்கள் மூலம் இந்த மேக்புக்கை இயக்க முடியும். மேலும் இந்த மேக்புக்கில் இருக்கும் உயர் ரிசலூசன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் பேஸ் டைம் கேமரா மற்றும் மிகத் தரமான ஸ்பீக்கர்கள் ஆகிய எல்லாமே இந்த மேக்புக்கிற்கு அதிக பெருமையைச் சேர்க்கின்றன.

இந்த புதிய மேக்புக்கின் பேட்டரி அதிக இயங்கு நேரத்தை வழங்கக்கூடியவை. மேலும் இணைப்பு வசதிகளுக்காக இந்த மேக்புக்கில் ப்ளூடூத், யுஎஸ்பி, வைபை போன்ற வசதிகளையும் பார்க்கலாம்.

இறுதியாக இந்த புதிய மேக்புக் 15 இன்ச் மாடல் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மல்டி மீடியா அனுபவத்தை வழங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X