Home
Computer

வீடியோ கேம்ஸ் பிரியர்களுக்கான ஆசஸ் லேப்டாப்புகள்

By Super
வீடியோ கேம்ஸ் பிரியர்களுக்கான ஆசஸ் லேப்டாப்புகள்
வீடியோ கேம் பிரியர்களுக்கென்றே ஆசஸ் நிறுவனம் ஆசஸ் ஜி74எஸ்எக்ஸ் மற்றும் ஜி53எஸ்எக்ஸ் என்ற இரண்டு புதிய லேப்டாப்புகளை களமிறக்குகிறது. ஹார்ட்கோர் வீடியோ கேம்கள் வழக்கமாக ஆறுதலாக இருக்கும்.

ஆனால் பழைய பாணியில் வீடியோ கேம் விளையாடும் பிரியர்கள் ஏராளமாக உள்ளனர். அதை மனதில் வைத்தே இந்த புதிய ஆசஸ் ஜி74எஸ்எக்ஸ் மற்றும் ஜி53எஸ்எக்ஸ் வீடியோ கேம் பிரியர்களை திருப்திப்படுத்த வருகிறது.

ஆசஸ் ஜி74எஸ்எக்ஸ் ஆசஸின் கூலிங் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளதால் அதன் ப்ராசஸர் கடினமான வேலைகளைச் எளிதாக செய்யக்கூடியது. மேலும் எளிதாக சூடாகாது. அதே நேரத்தில் ஜி53எஸ்எக்ஸ் 3டி நோட்புக் 3டி கேம் டிவைஸ் கொண்டுள்ளது. அதனால் இதன் திரை ஸ்பிளிட் வசதி கொண்டு 2டி மற்றும் 3டி என்று அந்த திரையை பிரிக்க முடியும்.

ஆசஸ் ஜி74எஸ்எக்ஸ் இன்டல் கோர் ஐ7 ப்ராசஸருடன் 2ஜிஹர்ட்ஸ் கடிகார வேகத்துடன் சான்டி பிரிட்ஜ் 2630க்யுஎம் சிப்செட் கொண்டுள்ளது. ஜி53எஸ்எக்ஸ் அதே சமமான ப்ராசஸர் கொண்டுள்ளது. ஆனால் ஜி74எஸ்எக்ஸ் சற்று அதிகமான அளவில் க்ராபிக்ஸ் வசதிகளை வழங்குகிறது.

அதாவது அது என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடிஎக்ஸ்560எம் க்ராபிக்ஸ் அக்சிலரேட்டர் கார்டு கொண்டுள்ளது. அதனால் இதில் வீடியோ கேம்களை விரைவாக விளையாட முடியும். அதற்குரிய 3ஜிபி டிடிஆர்3 வீடியோ மெமரி மற்றும் இன்டல் ஜிஎம்எ எச்டி கார்ட் கொண்டுள்ளது. ஆனால் ஜி53எஸ்எக்ஸ் 2ஜிபி டிடிஆர்3 வீடியோ மெமரி மட்டுமே கொண்டுள்ளது.

இரண்டு லேப்டாப்களின் கீபோர்ட்கள் மிகவும் பக்காவாக உள்ளன. இதன் 5டிகிரி இன்கிளினேசன் இதில் வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும் வசதியாக இருக்கும். இரண்டுமே முழுமையான எச்டி 1080பி டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.

அதிலும் சிறப்பாக ஜி74எஸ்எக்ஸ் பெரிய அதாவது 15 இன்ச் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. ஜி53எஸ்எக்ஸின் டிஸ்ப்ளே 15 இன்ச் ஆகும். ஜி53எஸ்எக்ஸ் டிஎச்எக்ஸ் மற்றும் இஎஎக்ஸ் 5.0 3டி ஒலி அமைப்பு கொண்டு 3டி டிவியில் கேம் விளையாடும் சப்போர்ட்டை வழங்குகிறது.

அதேபோல் இதிலுள்ள 10000 ஆர்பிஎம் எஸ்எஸ்டி விரைவான பூட்டிங்கிற்கும் வழி வகுக்கிறது. அதே போல் ஜி74எஸ்எக்ஸிலும் வேகம் தாறுமாறாக இருக்கும். இரண்டுமே யுஎஸ்பி வி2.0 மற்றும் வி3.0 போர்ட்டுகளைக் கொண்டுள்ளன. ஆனால் ஜி74எஸ்எக்ஸ் ஒரு ப்ளு ரே ட்ரைவ் ஆகும்.

ஜி74எஸ்எக்ஸ் ரூ.75,000க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜி53எஸ்எக்ஸின் விலை அதைவிட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் விலை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X