Home
Computer

வர்த்தக பயன்பாடுகளுக்கான வசதியுடன் புதிய மோட்டோ டேப்லெட்

By Super
வர்த்தக பயன்பாடுகளுக்கான வசதியுடன் புதிய மோட்டோ டேப்லெட்
வியாபார பயன்பாட்டுக்காகவே மோட்டோரோலா இடி1 என்ற புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த மோட்டோரோலா இடி1 ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கொண்டிருந்தாலும் விண்டோஸ் சிஇ மற்றும் விண்டோஸ் மொபைல் இயங்குதளத்தில் இயங்கும் மற்ற மோட்டோராலாவின் டிவஸ்களோடு ஒரு பகுதியாகவே இருக்கும்.

மோட்டோரோலா நிறுவனம் குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்காக அதிலும் குறிப்பாக மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் விற்பனைப் பிரிவில் ஈடுபடுபவர்கள், மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்காக இந்த புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்துகிறது.

மோட்டோரோலா இடி1 ஒரு மலை போன்ற ஹார்ட்வேரைக் கொண்டுள்ளது. இதில் நீர் தடுப்பு மற்றும் தூசி தடுப்பு வசதிகள் உள்ளன. மேலும் 8 மணி நேரம் தாங்கக் கூடிய ரீஜார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் உள்ளன. மேலும் இந்த டேப்லட்டை ஆப் செய்த பிறகு 15 நிமிடம் வரை இதன் பேட்டரி இயக்கத்தில் இருக்கும்.

மோட்டோரோலா இடி1 1ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர் கொண்டு அதோடு 1ஜிபி ரேமும் மற்றும் 4ஜிபி ப்ளாஷூம் கொண்டுள்ளது. மேலும் இது மைக்ரோஎஸ்டி கார்டோடு சேர்த்து 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய மெமரியைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா இடி1 வியாபார நோக்கத்திற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளதால் வியாபாரத்தைச் சார்ந்த அத்தனை வேலைகளையும் செய்யக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக பொருள்களை விற்பதற்கான வசதிகள், மேலாளர்களுக்கான டாஷ்போர்டுகள் மற்றும் வேலையாள்களுக்கான பணி விவரங்கள், மற்றும் பணியாளர்களின் வருகை பற்றிய விவரம் போன்ற அத்தனை விவரங்களும் இதில் உள்ளன.

மோட்டோரோலா இடி1ல் சில இதர விவரங்களும் உள்ளன. அதாவது வருகை தரும் விருந்தினர்கள் மற்றும் வெளியாள்களை சோதனை செய்து கவனிப்பதற்கும் தேவையான் வசிதகளை இது வழங்குகிறது.

மோட்டோரோலா இடி1ல் வீடியோ கான்பரசிங் மிக அற்புதமாக உள்ளது. இது விஒஐபியுடன் இயங்குகிறது. மேலும் இது கிரடிட் கார்டுகளை ஏற்பதற்கான வசதி மற்றும் பார்கோடுகளை ஸ்கேன் செய்வதற்கான வசதிகளையும் வழங்குகிறது. மேலும் இது 2 இன்பில்ட் கேமராக்களோடு வைபையும் கொண்டு வருகிறது.

குறிப்பாக விற்பனைப் பிரிவில் இருப்பவர்கள் எப்போதுமே பரபரப்பாக வேலைப் பளுவுடன் இருப்பார்கள். அதனால் அவர்கள் தங்களது ஒரு கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இந்த மோட்டோரோலா இடி1 டிசைன் செய்யப்பட்டுள்ளது என்று மோட்டாரோலாவின் ஷெல்டன் சபீர் கூறுகிறார். ஆம், மோட்டோரோலா இடி1ன் எடை 1.4 ஆகும். அதன் தடிமன் 1 இன்ச்சிக்கும் குறைவே. இதன் பரப்பு 8.8X5.1 இன்ச்சிகளாகும். அதனால் இதை எளிதாக ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்ற முடியும். மோட்டோரோலா இடி1ன் திரை 7.2 இன்ச் ஆகும்.

சபீரின் கூற்றுப்படி ஆண்ட்ராய்டு இயங்கு தளம் மோட்டோரோலா இடி1ன் சக்தி வாய்ந்த செயல்பாட்டுக்குத் தேவையான வசதிகளை வழங்க முடியாதலால் மோட்டோரோலா இடி1 டேட்டா செக்யூரிட்டியையும் என்கிரிப்சன் வசதிகளையும் அதிகரித்திருக்கிறது. அதனால் மோட்டோரோலா இடி1ஐ பயன்படுத்துவோர் தமக்குத் தேவயான வசதிகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.

மோட்டோரோலா இடி1ன் விலையைப் பார்த்தால் அது 800 அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.39,000 ஆகும். இந்த டேப்லட் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு வலது கரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X