14 நாட்களில் 14 லட்சம் புக்கிங்: "ஆகாஷ்" டேப்லெட் சாதனை

Posted By: Staff
14 நாட்களில் 14 லட்சம் புக்கிங்:
எத்தனை புதிய தொழில் நுட்பம் வந்தாலும், சில எலக்ட்ரானிக் சாதனங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு சாதனை நிகழ்த்திவிடுகின்றது. இதற்கு உதாரணமாக ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை சொல்லலாம்.

2011-ஆம் ஆண்டு அதிக வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து தன் பக்கம் சாய்த்த ஸ்மார்ட்போன் இது. அதே போல் இன்னொரு சாதனை பட்டியலை தயார்படுத்திவிட்டது ஆகாஷ் டேப்லட்.

உலகின் மிகக்குறைந்த விலை டேப்லெட்டாக கருதப்படும் ஆகாஷ் டேப்லெட்டுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வர்த்தக ரீதியில் விற்பனைக்காக புக்கிங் துவங்கப்பட்டது. இந்த நிலையில், புக்கிங் துவங்கப்பட்டு இரண்டு வாரத்திலேயே 14 லட்சம ஆகாஷ் டேப்லெட்டுகள் ஆன்-லைனில் புக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த மின்னல் வேக விற்பனை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரிய திகைப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.

இது போன்ற ராக்கெட் வேக விற்பனையை பார்க்கும் போது தொழில் நுட்ப நிபுணர்களின் திறமையையும், இளைஞர்கள் எலக்ட்ரானிக் சாதனஙகளில் மேல் வைத்துள்ள ஆர்வத்தினையும் வியந்தே ஆக வேண்டி இருக்கிறது. இந்த புதிய டேப்லட் இன்னும் என்னென்ன சாதனைகளை செய்கிறது என்று பார்ப்போம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot