விரைவில் 2 புதிய டாப்லட்டுகள் - எம்எஸ்ஐ அறிவிப்பு

By Super
|

விரைவில் 2 புதிய டாப்லட்டுகள் - எம்எஸ்ஐ அறிவிப்பு

1986ல் தொடங்கப்பட்ட எம்எஸ்ஐ நிறுவனம் டிஜிட்டல் உலகில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் நிறுவனமாக இருக்கிறது. கடந்த 25 வருடங்களாக தரமான மின்னணு சாதன தயாரிப்புக்களை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

இப்பொழுது அந்நிறுவனம் என்ஜாய் 10 மற்றும் என்ஜாய் 7 என்ற இரண்டு டாப்லட்டுகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. உண்மையாகவே இவற்றைப் பயன்படுத்துவோருக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று அந்நிறுவனம் நம்புகிறது. மேலும் இந்த 2 டாப்லட்டுகளின் தொடர்ச்சியாக இன்னும் பல புதிய டாப்லட்டுகளே அவர்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

என்ஜாய் 10 மற்றும் என்ஜாய் 7 என்ற இரண்டு டாப்லட்டுகளும் சமமான விதத்தில் எல்லா வசதிகளையும் கொண்டுள்ளன. வித்தியாசம் என்னவென்றால் என்ஜாய் 10 டாப்லட் 10 இன்டச் அளவையும் என்ஜாய் 7 டாப்லட் 7 இன்ச் அளவையும் கொண்டுள்ளது. எம்எஸ்ஐ நிறுவனம் இரண்டு டாப்லட்டுகளையும் சிறந்த செயல்திறத்துடன் தயாரித்தள்ளது. இரண்டிலுமே ஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரீடு ஆபரேட்டிங் சிஸ்டமும் 1.2ஜிஹச்ஸட் கோர்டெக்ஸ்-ஏ8 ப்ராஸஸரும் உள்ளன.

மேலும் இதனை பயன்படுத்துவோர் இன்பமடைய விரைவாக இயங்கக்கூடிய வகையில் சிறந்த வைபை மற்றும் ப்ளூடூத் அகிய வசதிகளை வழங்குகின்றன.

இரண்டு டாப்லட்டுகளும் வீடியோ ரிக்கார்டிங் மற்றும் படம் எடுப்பதற்காக 2 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் ஆடோப் ப்ளாஷ் 10.1 போன்றவற்றை வழங்குகின்றன.

இவற்றின் சேமிப்பு வசதியும் 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவில் நன்றாக உள்ளது. இரண்டு டாப்லட்டுகளும் 4ஜிபி இன்டர்னல் மெமரி கார்டு பெற்றிருக்கின்றன. இவற்றின் பேட்டரியுனுடைய சக்தி 4000 எம்எஹச் ஆகும். மேலும் இவை 3.5 எம்எம் ஜாக்கையும் கொண்டிருப்பது இவற்றின் சிறப்பாக அமைகிறது.

இவற்றின் தொடுதிரையை பொறுத்தவரை என்ஜாய் 10 டிஸ்பிளே 1024 x 768யும் என்ஜாய் 1 டிஸ்பிளே 800 x 480யும் கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையைளர்கள் தமக்கு விரும்பி அளவுகளில் டாப்லட்டுகளை வாங்கும் வசதியைப் பெறுகின்றனர்.

என்ஜாய் 10-ஐ ரூ. 14,999க்கும் என்ஜாய் 7-ஐ 13,999க்கும் வாங்கி என்ஜாய் பண்ணலாம்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X