Home
Computer

மாணவர்களுக்கான பிரத்யேக ஆப்பிள் லேப்டாப்!

By Karthikeyan
மாணவர்களுக்கான பிரத்யேக ஆப்பிள் லேப்டாப்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அப்பிள் எப்போதுமே ஏமாற்றியது கிடையாது. குறிப்பாக ஆப்பிள் வழங்கும் சாதனங்கள் அனைத்தும் தரத்திலும், தொழில் நுட்பத்திலும் மற்றும் செயல் திறனிலும் சூப்பராக இருக்கும். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து இப்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் அது தனது 13 இன்ச் மேக்புக் ஒயிட்டுக்கு குட் பை சொல்ல இருக்கிறது என்பதாகும்.

குறிப்பாக இந்த மேக்புக் கல்வித் தேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மேக்புக் நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் ஆப்பிள் அந்த மேக்புக்கை நிறுத்தியதற்கு ஒரு சரியான காரணமும் இருந்தது.

அது என்னவென்றால் ஆப்பிள் தனது 13 இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திட்டமாகும். இந்த புதிய சாதனம் ரூ.50,000குள் இருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் இந்த புதிய சாதனத்தில் அதி நவீன தொழில் நுட்பங்களும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் இதன் விலை பெரியதாகத் தெரியாது.

இந்த மேக்புக் ஏரின் ப்ராசஸர் 1.6 ஜிஹெர்ட்ஸ் இன்டல் கோர் ஐ5 ஆகும். இதுபோல் இதன் ரேம் 2ஜிபி சேமிப்பைக் கொண்டுள்ளது. எஸ்எஸ்டி கார்டு மூலம் இதை 64ஜிபி அளவிற்கு விரிவுபடுத்தவும் முடியும். மேலும் இந்த மேக்புக் ஏர் 1400 X 900 பிக்சல் ரிசலூசனை வழங்கும்.

இந்த புதிய மேக்புக் ஏர் பழைய மேக்புக் ஒயிட்டுக்கு பதிலியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த புதிய மேக்புக் ஏர் கல்வி நிலையங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதனால் இந்த சாதனத்தின் சில்லறை வர்த்தகத்தை ஆப்பிள் தடை செய்திருக்கிறது. மொத்தமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுகின்றன.

மேலும் ஆப்பிள் ஒரு ஆர்டருக்கு குறைந்தது ஐந்து மேக்புக்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது. அதனால் ஒரு மேக்புக்தான் வேண்டும் என்று தனியாக வாங்க முடியாது. ஐந்தையும் சேர்த்துதான் வாங்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X