Home
Computer

அகன்ற திரையுடன் வரும் புதிய ஆசஸ் நோட்புக்!

By Super

அகன்ற திரையுடன் வரும் புதிய ஆசஸ் நோட்புக்!
தற்போதைய டிஜிட்டல் துறையில் ஆசஸ் நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் அதிகம். அந்த வகையில் தற்போது ஆசஸ் நிறுவனம் புதிதாக ஆசஸ் யு32யு என்ற நோட்புக்கை அறிமுகப்படுத்தகிறது. இந்த நோட்புக்கின் டிஸ்ப்ளே 13.3 இன்ச்களாகும். மேலும் இதில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த யு32யு நோட்புக் விண்டோஸ் 7 ஹோம் பேசிக் இயங்குதளம் கொண்டு வருகிறது. அடுத்ததாக இது எஎம்டிஇன் இ-4 பியூசன் எபியு தொழில் நுட்பம் கொண்டு வருவதால் இதன் டிஸ்ப்ளே மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் இதில் வரும் நிறங்களும் மிக துல்லியமாக தெரியும்.

தொடக்கத்தில் ஆசஸ் ஏஎம்டி இ-350 ப்ராசஸரை பயன்படுத்தி வந்தது. தற்போது ஏஎம்டி இ-4 ப்ராசஸரைக் இந்த நோட்புக் வருகிறது. இது பழையதை விட செயல்திறன் மிக்கதாக இருக்கும். இது 2 ஜிபி ரேம் மற்றும் 320 ஜிபி ஹார்டு டிஸ்க்குடன் வருகிறது.

மேலும் ஆசஸ் யு32யு நோட்புக் பலவிதமான யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டுள்ளதால் இதை மற்ற டவைஸ்களோடு மிக எளிதாக இணைக்க முடியும். இதன் பேட்டரியைப் பார்த்தால் இது 8 செல்களுடன் 5,600எம்எஎச் டைப் பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரி 12 மணி நேரம் தாங்கும் சக்தியை கொண்டது.

மேலும் சாட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் தேவைகளுக்காக வெப் கேமராவையும் கொண்டுள்ளது. அதுபோல் இந்த நோட்புக் 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. மேலும் இதன் விலையைப் பார்த்தால் அது ரூ.25,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X