விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தக் கூடிய 12 ரன் கமாண்ட்கள்
விண்டோஸ் இயங்குதளத்தில் மிக எளிமையாக பயன்படுத்தக் கூடிய அம்சங்களில் ஒன்று தான் ரன் கமாண்ட். கமாண்ட் பாக்ஸ்-இல் ரன் என டைப் செய்தால் நீங்கள் இயக்க வேண்டிய அம்சத்தை சில க்ளிக்-களில் ஆன் செய்ய முடியும்.

இந்த கமாண்ட்கள் அம்சங்கள் மற்றும் செயலிகளை மிக எளிமையாக இயக்க வழி செய்வதோடு நம் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைத்தும் கொள்ள முடியும். சமீப காலங்களில் ரன் கமாண்ட்களின் பயன்பாடு குறைந்திருந்தாலும் சிலர் இவற்றை இன்றும் பயன்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றனர்.
அந்த வகையில் உங்களுக்கு பயனுள்ள சில ரன் கமாண்ட்களை தொடர்ந்து பார்ப்போம்..

* "\" கமாண்ட் கொண்டு சி டிரைவினை இயக்க வழி செய்யும். இதற்கு ரன் கமாண்டில் \ மட்டும் டைப் செய்தால் போதும்.
* "." கமாண்ட் கொண்டு பயனரின் ஹோம் ஃபோல்டரை இயக்க முடியும். இதில் டவுன்லோடு, டாக்குமெண்ட், டெஸ்க்டாப், பிக்சர்ஸ் உள்ளிட்டவற்றை இயக்கலாம்.
* ".." முந்தைய கமாண்டு ஹோம் ஃபோல்டரை இயக்கினால், இந்த அம்சம் பயனரின் சி டிரைவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்சங்களை திறக்கும்.

* கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் பட்டன் - அக்சஸரீஸ் - கால்குலேட்டர் அம்சத்தை இயக்குவதற்கு பதில் ரன் கமாண்டில் Calc என டைப் செய்து எண்டர் பட்டனை கிளிக் செய்து நொடியில் கால்குலேட்டரை இயக்கலாம்.
* உங்களது போனினை ரூட் செய்ய கமாண்ட் பிராம்ப்ட் செல்ல வேண்டும். இதற்கு ஸ்டார்ட் பட்டன் செல்லாமல், நேரடியாக விண்டோஸ் பட்டன் + R பட்டன்களை ஒன்றாக கிளிக் செய்து Cmd என டைப் செய்து கமாண்ட் பிராம்ப்ட் திரைக்கு செல்ல முடியும்.
* Powershell என டைப் செய்து அட்மினிஸ்ட்ரேட்டர் செல்லாமல் பவர்ஷெல் அம்சத்தை ஆன் செய்ய முடியும். இதற்கு ரன் கமாண்ட் பாக்ஸ்-இல் Powershell என டைப் செய்து என்டர் பட்டனை கிளிக் செய்யலாம்.
* உங்களது கண்ட்ரோல் பேனல் அம்சத்தில் உள்ள அட்வான்ஸ்டு யூசர் அக்கவுண்ட் ஆப்ஷனை இயக்க netplwlz என டைப் செய்ய வேண்டும்.
* கம்ப்யூட்டரின் ஃபைல்களை சுத்தம் செய்ய வேண்டுமெனில் டிஸ்க் மேனேஜரை இயக்க வேண்டும். ஆனால் இதை எளிதாக ஓபன் செய்ய diskmgmt என டைப் செய்தாலே போதும்.
* ரன் கமாண்டில் notepad என டைப் செய்தால் சில கிளிக்-களில் நோட்பேட் செயலியை இயக்கிவிடாம். அவசர குறிப்புகளை பதிவு செய்ய இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
* கம்ப்யூட்டரின் சில செயலிகள் ஒழுங்காக வேலை செய்யாத போது, ரன் கமாண்டில் control.exe/name microsoft.troubleshooting என டைப் செய்து அவற்றை சரி செய்யலாம். வழக்கமான செட்டிங்ஸ் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த கமாண்ட் குழப்பமின்றி பிரச்சனையை சரி செய்திடும்.
* write என டைப் செய்தால் கம்ப்யூட்டரின் வொர்ட்பேட் (wordpad) செயலி இயக்கப்படும். இதற்கு ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் மெனு சென்று வொர்ட்பேட் செயலியை தேட வேண்டிய அவசியம் கிடையாது.


Click it and Unblock the Notifications