மலிவு விலை லேப்டாப் தயாரிப்பில் இறங்கும் எல்ஜி

By Super
|
மலிவு விலை லேப்டாப் தயாரிப்பில் இறங்கும் எல்ஜி
எல்ஜி நிறுவனம் தனது புதிய மலிவு விலை லேப்டாப் மூலம் மீண்டு இந்திய சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கத் திட்டமிடுகிறது. அதற்காக தனது வர்த்தக உத்தியையும் மாற்றியிருக்கிறது.

எல்ஜியின் மின்னனு துறையின் தலைவர் சஞ்சய் பட்டாச்சார்யா கூறுகையில் எல்ஜி இன்னும் 3 வருடங்களில் லாப்டாப் தயாரிப்பில் முதல் 5 இடங்களுக்குள் வர திட்டமிட்டிருக்கிறது என்று கூறுகிறார். அது எவ்வாறு எனில் மலிவு விலையில் லேப்டாப்புகளை வழங்குவதன் முலம் அதை அடைய முடியும் என்று நம்புகிறார்.

அதனால் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய 13.3 இன்ச் நோட்புக்கை வழங்க இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இதற்கு முந்தைய எல்ஜியின் லேப்டாப்புகள் அனைத்தும் மிகவும் அதிக வசதிகள் கொண்டவை. குறிப்பாக அவை எக்ஸ்ட்ரா டூவல் திரை கொண்டிருந்தன.

அதுபோல் எக்ஸ்ட்ரா யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் ப்ளூ கோர் கொண்டிருந்தன. மேலும் புதிய தொழில் நுட்பமும் அதுபோல் பார்ப்பதற்கு கவரக்கூடியதாகவும் அதுபோல் வாடிக்கையைளர்களின் எதிர்பார்ப்பதிற்கும் மேலான லேப்டாப்பை வழங்க வேண்டும் என்று எல்ஜி முடிவெடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட லேப்டாப்பாக இருந்தால் அது குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்பதையும் எல்ஜி நிறுவனம் அறிந்திருக்கிறது.

இப்போது இந்தியாவில் எல்ஜி தனது 13 இன்ச் நோட்புக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை ரூ.26000 முதல் ரூ.66780க்குள் இருக்கும்படி நிர்ணயித்திருக்கிறது. ஆனால் இதன் பழைய லேப்டாப்புகள் ரூ.32000க்கு மேல் இருந்தன. அதனால் பலர் அதிகமாக அந்த லேப்டாப்புகளை வாங்கவில்லை.

அதனால் அதை உணர்ந்து இப்போது ரூ.66000லிருந்து ரூ.69000க்குள் இரண்டு 3டி லேப்டாப்புகளை வழங்குகிறது. மற்ற 3டி லேப்டாப்புகள் இதை விட அதிக விலையாகும். அதுபோல் எல்ஜியின் லேப்டாப்புகள் மற்ற லேப்டாப்புகளை விட 16% எடை குறைந்ததாகவும் 50% மெல்லியதாகவும் இருக்கும்.

இந்த நிலையில் எல்ஜி ரூ.22000க்குள் புதிய நோட்புக்குகளை வெளியிட முடிவெடுத்திருக்கிறது. குறிப்பாக விலை குறைந்த லேப்டாப்புகளை விரும்பி வாக்கும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவே இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக இத்தகைய லேப்டாப்புகளை இந்த வருட இறுதிக்குள் 4.4 மில்லியன் யூனிட்டுகளை களமிறக்க முடிவெடுத்திருக்கிறது.

அந்த முடிவு கண்டிப்பாக எல்ஜிக்கு நல்ல 2வது தொடுக்கத்தைக் கொடுக்கும் என நம்பலாம். குறிப்பாக இதன் வர்த்தகத்தை முதலில் பிளோ லைன் (பிடிஎல்) முறையில் அதாவது 125 ப்ராண்ட் கடைகளிலும் பின் 40 பெரிய ஸ்டோர்களிலும் பின் 300 ஐடி அவுட்லெட்டுகளிலும் அறிமுகப்படுத்துகிறது. ஆனால் இது படிப்படியாக 2012ல் அதிகரிக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X