புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் பியர் கார்டின்

நமக்குக் கிடைத்த தகவலின் படி பியர் கார்டின் முதன்முதலாக இங்கிலாந்தில் தமது டாப்லட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளனர். அவர்களுடைய படைப்பான பிஸி- 7006 என்ற புதிய டாப்லட் 7இன்ச் அளவில் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும். தொடுதிரையுடன் கூடிய அதன் டிஸ்பிளேயின் ரிசலூஷன் 800 x 480 ஆகும். மேலும் அது 1ஜிஹச் வேகத்தில் இயங்கக்கூடிய சாம்சங்கின் எஸ்5பிவி210 கோர்டெக்ஸ்-எ5 ப்ராஸஸரைக் கொண்டுள்ளது.
பியர் கார்டினின் பிஸி-7006 சிறந்த வேகத்தில் இயங்கக்கூடிய 3ஜி நெட்வொர்க் மற்றும் வைபையும் பெற்றிருக்கிறது. மேலும் இது 3ஜி யுஎஸ்பி மோடம் கொண்டுள்ளதால் பயன்படுத்துவோருக்கு அது 3ஜி பரவசத்தைக் கண்டிப்பாக அளிக்கும். அதிலும் சிறப்பாக இது 4ஜிபி இன்டர்னல் மெமரி கார்டையும் 16ஜிபி விரிவுபடுத்தக்கூடிய சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளதாக கண்டிப்பாக வாடிக்கையாளர்களை ஏமாற்றாது என நம்பலாம்.
பியர் கார்டினின் பிஸி-7006ன் வடிவமைப்பு மிகவும் சூப்பராக இருக்கிறது. மேலும் கறுப்பு வண்ணத்திலான் தோல் உறையை இலவசமாக வழங்குவதால் இதன் அழகு மேலும் மெருகேருகிறது. இந்த உறை டாப்லட்டை சேதாரத்திலிருந்து காப்பாற்றி அதற்கு ஒரு புதிய அழகையும் கொடுக்கிறது.
பொழுதுபோக்கு அம்சங்களான மியூசிக் ப்ளேயர் மற்றும் வீடியோ ப்ளேயர் மற்றும் வீடியோ ரிக்கார்டிங்கிற்கான கேமரா வசதி ஆகியவற்றையும் பியர் கார்டினின் பிஸி-7006 வழங்குகிறது. ப்ளூடூத் மற்றும் பவர் மேனேஜ்மென்ட் அதோடு தரமான பேட்டரி ஆகியவை இதன் முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
தற்போது பியர் கார்டினின் பிஸி-7006 ஐரோப்பிய சந்தையில் மட்டுமே கிடைக்கிறது. 2011க்குள் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனுடய விலை ரூ. 20000க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications