Home
Computer

ஸ்டைலிஷ் வடிவமைப்புடன் புதிய டேப்லெட்டை அறிமுகப்படு்த்துகிறது சோனி

By Super
ஸ்டைலிஷ் வடிவமைப்புடன் புதிய டேப்லெட்டை அறிமுகப்படு்த்துகிறது சோனி
அழகு+ ஆற்றலுடன் கூடிய புதிய டேப்லெட்டை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது சோனி எரிக்ஸன்.

உங்கள் லைஃப் ஸ்டைலை மாற்றி அமைக்க மிகவும் ஸ்டைலாக வருகிறது சோனி எஸ் வைபை.

இந்த மாடல் ஒரு ஆன்ராய்டு 3.2 வசதி கொண்ட டேப்லட். இதனால் 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும்.

வேகமான உலகத்தில் நீங்களும் வேகமாக இயங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?உங்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட மாடல் தான் சோனி எஸ் வைபை டேப்லெட்.

சோனி எஸ் வைபை புதிய மாடலில் பல வசதிகளைக் கொண்டதாக உள்ளது. இதில் புதிய தொழில் நுட்பங்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் நுட்பமாக உருமாக்கப்பட்டுள்ளது.

டியூவல் கோர் டெக்ரா பிராசஸருக்கு இதன் 2.3 ஆன்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு உதவுகிறது. வேகமாக செயல்படும் விதத்தில் 1ஜிபி ரேம் வசதி வழங்கப்பட்டுள்ளது. உங்களை அசத்த வைக்கும் வகையில் 9.4 இன்ச் டச் ஸ்கிரீன் வசதியை கொடுக்கிறது. 1280 X 800 பிக்ஸல் ரிசல்யூஷன் கலர் சப்போர்ட் கொண்டது.

4.9 ரியர் கேமிரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 0.3 முகப்புக் கேமிரா மற்றும் புளூடூத் வசதியும் இதில் உள்ளது. இதில் ஆட்டோ ஃபோகஸ், 1 X ஆப்டிக்கல் சூம் உள்ளது. இதனால் தூரத்தில் உள்ள விஷயங்களைக் கூட மிகவும் பக்கத்தில், தெளிவாகப் பார்க்க முடியும்.

நீங்கள் இந்த மாடலில் உள்ள வசதியின் மூலம் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி வெர்ஷன்ஸ் உள்ளது.சோனி எஸ் வைபை லேப்டப் தான் முதன் முதலில் ப்ளே ஸ்டேஷன் சான்றிதழ் பெற்றது.

இதில் கூடுதலாக க்ரேஷ் பேன்டிபூட்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.உங்களுக்கு விருப்பமான இசையை கேட்டுக்கொண்டே பிரவ்ஸ் செய்யலாம். ஆப்பிள் மாடலுக்கு சரியான போட்டியாளராக வந்துள்ளது இந்த சோனி எஸ் வைபை மாடல்.இந்திய விற்பனை சந்தையில் இதன் விலை ரூ.36,750 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X