டிஎம்-1 லேப்டாப்பை அப்டேட் செய்யும் எச்பி

Posted By: Staff

டிஎம்-1 லேப்டாப்பை அப்டேட் செய்யும் எச்பி
கணினி உலகில் நாளுக்கு நாள் எச்பி நிறுவனத்தின் மரியாதை எகிறிக்கொண்டே செல்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் தரமான லேப்டாப்புகளாகும். அந்த வகையில் இப்போது அந்நிறுவனம் தங்களது டிஎம்-1 அல்ட்ரா போர்ட்டபிள் லேப்டாப்பை அப்டேட் செய்யப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்த புதிய பெவிலியன் டிஎம்1 இரண்டு மாடல்களில் வருகிறது. ஒரு மாடல் 2ஜி இண்டல் கோர் ப்ராசஸரிலும் மற்றொன்று எஎம்டி இ-சீரிஸ் ப்ராசஸரிலும் வருகிறது. இரண்டாவது மாடல் எஎம்டி ரேடியோன் எச்டி க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யுனிட்டையும் கொண்டு அசத்துகிறது.

இந்த எச்பி பெவிலியன் டிஎம்1 அட்டகாசமான அகலாமான 11.6இன்ச் டிஸ்ப்ளேயுடன் 3.5ஐபிஎஸ் எடையுடன் வருகிறது. மேலும் மிருதுவான வருடக்கூடிய ரப்பரைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த டிஎம்1 லேப்டாப்பை மூடும் போது அதன் திரை மிக ரம்மியமாக தோன்றும். இதன் பேட்டரி பக்காவாக உள்ளது. மேலும் இதன் அடிப்பாகம் வளைவுகளுடன் மிக அம்சமாக உள்ளது.

இதன் கீபோர்ட் பழைய வெள்ளி நிறத்தில் இல்லாமல் சாம்பல் க்ரே அல்லது கருப்பு நிறத்திலும் வருகிறது. இதை பயணத்திற்கு ஏற்ற லேப்டாப் என்று அழைக்கலாம். ஏனெனில் இதிலுள்ள எச்பி ப்ரொட்டொக்ட்ஸ்மார்ட் வசதி இந்த லேப்டாப் தவறி கீழே விழந்தாலும் அல்லது அதன் ஹார்ட் டிஸ்க் திடீரென்று நின்று விட்டாலும் அது தானாக அத்தனை பைல்களையும் சேமித்துவிடும்.

இதிலுள்ள பீட்ஸ் ஆடியோவிலிருந்து வரும் இசை நம்மை குஷிப்படுத்தும். இதன் பேட்டரியை எடுத்துக் கொண்டால் 11.5 மணி நேரம் இயங்கக்கூடிய இமாலய திறன் கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot