Home
Computer

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய லேப்டாப்: ஏஸர் அறிமுகப்படுத்துகிறது

By Super
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய லேப்டாப்: ஏஸர் அறிமுகப்படுத்துகிறது
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட புதிய லேப்டாப்பை ஏஸர் விரைவில் வெளியிட உள்ளது.

ஆஸ்பயர் எத்தோஸ் ஏஸ்-8951ஜி-9600 என்ற குறியீட்டு பெயரில் வரும் இந்த லேப்டாப் 18.4 இன்ச் திரை வசதி கொண்டு கம்பீரமாகவும், அசத்தலான பெர்ஃபார்மென்சுடனும் மனதில் உயர்ந்து நிற்கிறது.

இதில் உள்ள அம்சங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா? இதோ உங்களுக்காக இதில் உள்ள வசதிகளின் பட்டியல். இதில் ரிமூவபில் டச்பேட் வசதி உள்ளது.இதனால் இதனை ரிமோட் கன்ட்ரோல் போல் பயன்படுத்த முடியும்.

இந்த மாடல் எப்பொழுதும் போல் கருப்பு நிறம் கொண்டது. ஆனால் இதன் மெட்டாலிக் ஃபினிஷிங் இதன் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஒரு ஹோம் தியேட்டர் போன்று உங்களை உணரச் செய்கிறது. எத்தோஸ் ஏஸ்-8951ஜி-9600 மாடல் 8.6 பவுன்ஸ் எடை, 1.5 இன்ச் உயரம் கொண்டது.

இதில், வயர்லெஸ் தொடர்பு வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதில் ஹெச்டிஎம்ஐ போர்ட் வசதியும், விஜிஏ போர்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

3.0 யூஎஸ்பி போர்ட் வசதியும், இஎஸ்ஏடிஏ/யூஎஸ்பி 2.0 போர்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 3.5 மில்லிமீட்டர் ஆடியோ ஜேக்,ஹெட்போன் ஜேக்,மைக்ரோபோன் ஜேக், ஃபையர் வையர் ஜேக் வசதிகளும் உள்ளது.

இன்னும் இதன் வசதிகளை அதிகப்படுத்தப் போவதாக ஒரு கருத்து நிலவுகிறது.இதன் வலது பக்கத்தில் 2.0 வெர்ஷன் கொண்ட யூஎஸ்பி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள போர்ட் வசதியினால் கம்ப்யூட்டர் ஆஃப் அல்லது ஸ்லீப் மோடில் இருக்கும் பொழுதிலும் எளிதாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

இதில் உள்ள வையர்டு லேன் மூலமாக எத்தரன்ட் ஜேக் வசதியைப் பெற முடியும்.இதன் முகப்புப் பகுதியில் மெமரி கார்டு ரீடர் உள்ளது. இதனால் எஸ்டி கார்ட்ஸ்,மெமரி ஸ்டிக் ப்ரோ,மல்டி மீடியாக் கார்ட்ஸ்,எக்ஸ்டி-பிக்சர் கார்டு போன்றவற்றையும் பயன்படுத்த முடியும்.

இதில் ஸினான்-ரீப்ளேசபில் எல் ஐ பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.இந்த வகையான பேட்டரி,எல் ஐ இயான் பேட்டரியையும் விட சிறந்தது. உங்களுடைய லேப்டாப்பிற்கு நீண்ட நாள் உழைக்கும் இந்த பேட்டரி ஒரு நம்பகமான நன்பன் என்று தாராலமாகக் கூறலாம்.

பேட்டரி சார்ஜ் செய்யும் பொழுது 1000-3000 சைக்கில்ஸ் வரை ஓடும் திறமைக் கொண்டது.இந்த லேப்டாப்புடன் பிளாஸ்டிக் மவுஸ் பேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.இதில் ஸ்லீக் டச் பேட் மற்றும் சாஃப்ட் டச் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளது.

எத்தோஸ் ஏஎஸ்-8951ஜி-9600 லேப்டாப் மாடலில் வீடியோ மற்றும் மியூசிக் ஐக்கான் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து வகையான ம்யூசிக் ட்ராக்ஸ் மற்றும் ஆல்பம்ஸையும் நீங்கள் ரசித்துக்கேட்கவும் முடியும்.

இப்படிப்பட்ட அற்புதமான லேப்டாப் மாடல் விலை ரூ.75,000 இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.இதைவிட குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த விலையில் இத்தகைய அரிய தொழில் நுட்பம் கொண்ட உங்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X