Home
Computer

மெயின்கியர் வழங்கும் புதிய லேப்டாப்

By Karthikeyan
மெயின்கியர் வழங்கும் புதிய லேப்டாப்

மெயின்கியர் நிறுவனம் ஒரு புதிய கேமிங் லேப்டாப்பைக் களமிறக்கி இருக்கிறது. இந்த கேமிங் லேப்டாப்பிற்கு மெயின்கியர் பல்ஸ் 11 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த 11.6 இன்ச் லேப்டாப் மிகவும் மேம்பட்ட கேமிங் வசதிகளுடன் வருகிறது. அதனால் இந்த லேப்டாப் கேமிங் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டல் கோர்ஐ5 ப்ராசஸர் கொண்டு வரும் இந்த மெயின்கியர் லேப்டாப் மிக வேகாமாக இயங்கும் திறன் கொண்டது. குறிப்பாக கேமிங் பிரியர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இந்த லேப்டாப் வடிவமைக்கப்படுகிறது.

அதற்காக அட்டகாசமான தொழில் நுட்பங்களை இந்த லேப்டாப் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதன் 11.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 1366x768 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. அதனால் இதில் கேமிங் கதாபாத்திரங்களம் மிகத் துல்லியமாகத் தெரியும். மேலும் இந்த லேப்டாப் என்விடியா ஜிடி650எம் ஜிபியு கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் அபார வேகத்தில் இயங்கும்.

மேலும் இந்த லேப்டாப் 16ஜிபி ரேம் மற்றும் 320ஜிபி ஹார்ட் ட்ரைவைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த லேப்டாப் மிக உறுதியாக இருக்கும். மேலும் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போன்ற இணைப்பு வசதிகளையும் இந்த லேப்டாப் கொண்டுள்ளது. அடுத்ததாக இந்த லேப்டாப் 2ஜிபி கொண்ட ஒரு வீடியோ ரேமையும் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த கேமிங் லேப்டாப் டிஎச்எக்ஸ் ட்ரூஸ்டூடியோ ப்ரோ சான்றிதழ் பெற்ற ஆடியோவைக் கொண்டிருப்பதால் இதன் ஆடியோ மிக பக்காவாக இருக்கும். குறிப்பாக கேமிங் விளையாடும் போது இந்த ஆடியோ பரவசப்படுத்தும்.

இந்த கேமிங் லேப்டாப் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர் கொண்டு வருவதால் இது மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இதன் வேகமும் மிக அபாரமாக இருக்கும். இந்த லேப்டாப் கருப்பு நிறத்தில் மிகக் களையாக இருக்கிறது.

இந்த புதிய மெயின்கியர் லேப்டாப்பின் விலை ரூ.55000 ஆகும். இந்த லேப்டாப் வரும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X