ரூ.16,000ல் டெல் வழங்கும் காம்பெக்ட் லேப்டாப்!

By Karthikeyan
|
ரூ.16,000ல் டெல் வழங்கும் காம்பெக்ட் லேப்டாப்!

டெல் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு 11ஸட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் பார்ப்பதற்கு பக்காவாக இருக்கிறது. அநேகமாக இந்த லேப்டாப் டெல் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

ஏனெனில் இந்த லேப்டாப் பல மேம்பட்ட தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக ஒரு இன்ச் தடிமன், 3 பவுண்டு எடையுடன் வரும் இந்த லேப்டாப் 11.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் கோர் ஐ3 ப்ராசஸர் மற்றும் 250ஜிபி ஹார்ட் ட்ரைவ் ஆகியவை இந்த லேப்டாப்பின் செயல் திறனை வலுப்படுத்தும்.

மேலும் இந்த லேப்டாப் 3.5ஜிபி சேமிப்பு, டெல் 1397 எபிஜி வயர்லஸ் வசதி, லித்தியம் பேட்டரி, இன்டல் எக்ஸ்4500 இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ், விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளம், 6 செல் பேட்டரி மற்றும் 2 வருட வாரண்டி ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

இந்த லேப்டாப்பில் ஆப்டிக்கல் ட்ரைவ் இல்லை. ஆனால் இன்டர்நெட், இமெயில் மற்றும் சமூக வலைதளங்களில் ஈடுபடுவோருக்கு இந்த லேப்டாப் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

இதன் கீபோர்டு மிகவும் மென்மையாக இருப்பதால் இதில் டைப் செய்வது மிக எளிதாக இருக்கும். மேலும் வேகமாகவும் வேலை செய்ய முடியும். ஆடியோ ஜாக்குகள் மற்றும் எஸ்டிஎச்சி ஸ்லாட்டுகள் போன்றவை லேப்டாப்பின் வலது பக்கம் உள்ளன. அதுபோல் லேன், எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போன்றவை வலது பக்கம் உள்ளன.

இந்த லேப்டாப்பின் விலை மிகவும் குறைவே. அதாவது இந்த லேப்டாப்பை ரூ.16000க்கு வாங்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X