நோக்கியா தயாரிக்கும் அதிநவீன டேப்லெட்

Posted By: Staff

நோக்கியா தயாரிக்கும் அதிநவீன டேப்லெட்

நோக்கியா நிறுவனமானது, லுமியா 920 தவிர்த்து தற்பொழுது எந்த சாதனத்தையும் சந்தைப்படுத்தாமல் சத்தமில்லாமல் இருக்கிறது. ஆனால் சில நம்பத்தகுந்த தகவல்களின்படி நோக்கியாவானது மைக்ரோசாப்ட் மற்றும் குவல்கம் ஆகிய நிறுவனங்களுடன் 10 அங்குல டேப்லெட் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துள்ளதாம்.

டிஜிடைம்சின் அறிக்கையின்படி, நோக்கியா 10 அங்குல டேப்லெட் தயாரிப்பில் தீவிரம் காட்டுகிறது. மேலும் இந்த புதிய சாதனம் வெளியிடப்பட்டால் ஆப்பிள் ஐபேட், சாம்சங் கேலக்ஸி நோட் மற்றும் கூகுள் நெக்சஸ் 10 ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும்.

 

அந்த அறிக்கையின் சாராம்சம் இங்கே:

விண்டோஸ் RT இயங்குதளம் தவிர, இந்த டேப்லெட் ARM ப்ராசெசர் பயன்படுத்துகிறது. இந்த டேப்லெட் 2013நின் பிப்ரவரி மாதம் வெளியிடப்படலாம்.

 

இதன் விலை சுமார் ரூ.21,900 இருக்கலாமெனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot