அனைத்து வசதிகளுடன் கூடிய டச்ஸ்மார்ட் 610 பிசி - எச்பி அறிமுகம்

இந்த கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 ஹோம் பிரீமியம்-64 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. உலக அளவில் தரம் வாய்ந்த இன்டெல் கோர் ஐ5-650, 3.2 ஜிஎச்ஸட் பிராசஸருடன் வந்துள்ளாதல் செயல்பாடு வேகமாக இருக்கும். தொடுதிரையுடன் கூடிய சூப்பரான டிஸ்பிளே மூலம் ரொட்டேட், பிளிக் மற்றும் ட்ராக் செய்ய வசதியை கொடுக்கிறது.
இதனுடைய பிரைய்வியூவ் எல்சிடி தொடுதிரை டிஸ்பிளே 23 இன்ச் அளவைக் கொண்டது. டிவி டியூனரும் இதில் உள்ளதால் நாம் டிவி சேனல்களையும் இதில் பார்த்து மகிழ முடியும். விஜிஏ வெப்காம் மைக்ரோபோன் பெற்றிருப்பதால் இதில் வீடியோ சாட்டிங் செய்யும் போது ஒரு புதிய அனுபவத்தைப் பெறலாம்.
டச்ஸ்மார்ட் 610 கம்ப்யூட்டர் பயன்படுத்துவோருக்கு எல்லாவிதமான வசதிகளையும் வழங்குகிறது. எம்எஸ் ஆபிஸ் முதல் போஸ்புக் மற்றும் ட்விட்டர் வரை அனைத்து அப்ளிகேஷன்களை எளிதாக இயக்கும் வசதிகளையும் பெறலாம். புதிதாக வந்திருக்கும் அப்ளிகேஷன்களையும் டச்ஸ்மார்ட் ஆப்ஸ் சென்டர் மூலமாக இதில் இணைக்க முடியும்.
டச்ஸ்மார்ட் 610 கம்ப்யூட்டர் எளிதான இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. சிமான்டெக் நார்ட்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி 2010 மூலம் லைவ் அப்டேட் செய்து 60 நாட்கள் வரை ஆன்ட்டி வைரஸ் சேவையை வழங்கும். மேலும் இதன் லிங்அப் மற்றும் மியூசிக் சென்டரில் இசை கேட்பது பரவசமான அனுபவத்தை கொடுக்கும்.
டச்ஸ்மார்ட்- 610 பிசி மிகவும் கவரக்கூடியதாக சிறந்த வீடியோ அனுபவத்தைக் கொண்டதாக உள்ளது. இதன் மியூசிக் ஸ்டேஷன் தெளிவான, துல்லியமான இசையை வழங்குகிறது.
எச்பி நிறுவனம் அனைத்து வாடிக்கையைளர்களும் எல்லா வசதிகளையும் ஒரே கம்ப்யூட்டரில் பெற வேண்டும் என்பதை கவனத்தில்க்கொண்டு இந்த புதிய டச்ஸ்மார்ட்-610 என்ற புதிய கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளனர். இந்த புதிய கம்ப்யூட்டர் ரூ.74,150 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications