விரைவில் சந்தையை அலங்கரிக்கவுள்ள 10 புதிய மாடல் லேப்டாப்
ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் லேப்டாப்புகள் ஒரே வடிவத்தில் உருவாகி வந்த நிலையில் தற்போது காலத்தின் தேவை மற்றும் போட்டி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் லேடாப்பை புதுப்புது வடிவங்களில் தயாரிக்க அதற்கென டிசைனர்களை வைத்துள்ளனர்.

அந்த டிசைனர்கள் தங்கள் மூளையை கசக்கி உருவாக்கிய டிசைன்கள் சந்தையில் வெற்றி பெற்று அனைவரின் மனங்களையும் கவர்ந்துள்ளது.
ஏர்டெல் அதிரடி : 10ஜிபி 4ஜி இண்டர்நெட் சலுகை அறிவிப்பு.!
ஒரு லேப்டாப்பின் உள்ளே என்னென்ன அம்சங்கள் இருக்கின்றது என்பதை பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு லேப்டாப்பின் டிசைனையும் கவனிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி லேட்டஸ்டாக என்னென்ன புதிய டிசைன்களில் லேப்டாப்புகள் வெளிவந்துள்ளன என்பதை பார்ப்போமா!!

கேரியோ (Cario) கான்செப்ட்டில் வந்த லேப்டாப்:
கார் ஸ்டியரிங் மீது வைத்து கொண்டே நீங்கள் இதை பயன்படுத்தலாம். ஆனால் கார் ஓட்டும்போது பயன்படுத்தாதீர்கள். அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்

ஐபேட் க்ளிக் வீல் கான்செப்ட் லேப்டாப்:
The Fujitsu DJ laptop என்று கூறப்படும் இவ்வகை லேப்டாப், ஐபேட் க்ளிக் ஐடியாவில் உருவாக்கப்பட்டடது. எளிதாக எந்த பக்கமும் திருப்பும் திறன் இதற்கு உண்டு.

இண்டெல் மெட்ரோ நோட்புக்:
விண்டே என்வெலப் மாதிரியே லேப்டேப்பை மூடியிருந்தாலும் உள்ளே உள்ள விஷயத்தை வெளியே பார்க்கும் வசதி கொண்டது. ஆனால் இவ்வகை லேப்டாப்புகள் இன்னும் வெளிவரவில்லை

தவளை தோற்றத்தில் ஒரு லேப்டாப்
தவளை கலரிலும் தோற்றத்திலும் காணப்படும் இவ்வகை லேப்டாப்புகள் உபயோகிக்க எளிதாகவும், அதே நேரத்தில் ஆர்வத்தை அதிகரிக்கவும் செய்யும் தன்மை கொண்டவை.

திங்க்பேட் ரிசர்வ் எடிஷன்:
புத்தகதை திருப்பி போட்டது போல் காட்சியளிக்கும் இவ்வகை லேப்டாபுகளில் கீபோர்டு தனியாக இருக்கும். உபயோகிக்க மிகவும் ஆர்வம் கொண்ட மாடல்களில் இதுவும் ஒன்று

இரண்டு டிஸ்ப்ளே கொண்ட ஆசஸ் லேப்டாப்
இரண்டு டிஸ்ப்ளே கொண்ட லேப்டாப். இதன் இரண்டாவது டிஸ்ப்ளே சிறியதாகவும் உபயோகிக்க எளிதானதாகவும் இருப்பதால் அனைவரையும் கவர்ந்துள்ளது.

டிராவல்லர் லேப்டாப்:
டிராவல்லர் பேக் மாதிரியே வடிவம் கொண்ட இந்த லேப்டாப்பை உருவாக்க அந்த டிசைனர் எப்படித்தான் யோசித்தாரோ தெரியவில்லை. படத்தை பார்த்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

எச்.பி கான்செப்ட்டில் ஒரு லேப்டாப்:
எச்பி கான்செப்ட்டில் பல உபகரணங்கள் வந்திருந்தாலும் நீங்கள் படத்தில் பார்க்கும் இவ்வகை லேப்டாப் அனைத்து டிசைன்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்காகவே ஒரு லேப்டாப்:
குழந்தைகளின் மனதை கவரும் வகையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை லேப்டாப்புகளில் நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்காதீர்கள்

திரவ சக்தியில் ஒரு லேப்டாப்:
வண்டிக்கு பெட்ரோல், டீசல் ஊற்றுவது போல திரவ சக்தியின் மூலம் இயங்கும் முதல் லேப்டாப் இதுதான். ஆனால் இது எந்த அளவுக்கு இது சக்ஸஸ் ஆகும் என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications