இந்தியன் வெர்ஷன் ஐ-பேடு: பெங்களூர் நிறுவனம் அறிமுகம்

By Super
|
இந்தியன் வெர்ஷன் ஐ-பேடு: பெங்களூர் நிறுவனம் அறிமுகம்
இந்தியாவின் டேப்லெட் கம்ப்யூட்டர் மார்க்கெட்டில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் வலுவான அடித்தளத்துடன் ஆட்டம் போட்டு வருகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்களின் கொட்டத்தை அடக்க விரைவில் டேப்லெட் கம்ப்யூட்டர் தயாரிப்பில் இறங்கப்போவதாக மேக்ரோமேக்ஸ் மற்றும் மேக்ஸ் மொபைல்போன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த ஈப்ட் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் புதிய டேப்லெட் கம்ப்யூட்டரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட அவுட்லெட்டுகள் வழியாக இந்தியாவின் முதல் ஐ-பேடு அம்சங்கள் கொண்ட டேப்லெட் என்ற பெருமையுடன் இது மார்க்கெட்டிற்கு வருகிறது.

ரூ.30,000க்குள் இந்த டேப்லெட் விற்பனை செய்யப்பட இருப்பதால், ஆப்பிள் மற்றும் சாம்சங் டேப்லெட் மார்க்கெட்டை அசைத்து பார்க்கும் வலிமை இந்த டேப்லெட்டிற்கு இருக்குமா? பார்க்கலாம்.

மாஜிக் டைல் மாரத்தான் என்ற பெயரில் வந்துள்ள இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. பொதுவாக, டேப்லெட்டுகளுக்கு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப்ட் ஓஎஸ் பொருத்தமாக இருக்கும். எனவே, ஹனிகோம்ப் ஓஎஸ் கொண்டதாக இந்த டேப்லெட்டை அறிமுகப்படுத்த இதன் தயாரிப்பாளர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மார்க்கெட்டில் இந்த டேப்லெட் ஆப்பிள் ஐ-பேடுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது. 10.1 இஞ்ச் ட்ச் ஸ்கிரீனுடன் மல்டிப்பிள் கட்டுப்பாட்டு பட்டன்களை கொண்டிருப்பதால், ஆப்பிள் ஐ-பேடை விட சிறப்பானதாக இருக்கும்.

ஒரு கிலோவுக்கும் குறைவான எடை கொண்டதாக இருக்கும் என்பதால், பயணங்களின்போது எடுத்து செல்வதற்கும், கையாள்வதற்கும் மிக எளிதாக இருக்கும்.

மாஜிக் டைல் மாரத்தானின் 1 ஜிகாஹெர்ட்ஸ் டூவல் கோர் ஏஆர்எம் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளதால், மல்டி டாஸ்க்கிங் வேலைகளில் சிறப்பாக செயல்படும். ஆனால், இது வெறும் 512 எம்பி சேமிப்பு திறன் மட்டுமே கொண்டதாக வந்துள்ளது மிகப்பெரிய குறை. இருந்தபோதிலும், 16 ஜிபி வரை இதன் சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ள முடியும்.

ஹைடெபினிஷன் ப்ளேபேக் வசதி கொண்டுள்ள இந்த டேப்லெட்டின் திரை மூலம் மிகத்துல்லியமான வீடியோ ப்ளேபேக்கை பார்க்கலாம்.

மாரத்தான் முக்கிய அம்சங்கள்:

3ஜி நெட்வொர்க் சப்போர்ட்

ஜிபிஎஸ், புளூடூத் மற்றும் வைஃபை

1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஓஎஸ்

ஹைடெபினிஷன் ப்ளேபேக்

பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட அவுட்லெட்டுகள் விற்பனைக்கு வரும் இந்த டேப்லெட் ரூ.30,000க்கும் குறைவான விலையில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X