ஆப்பிள் மேக்கிற்க்கான 10 துணைச்சாதனங்கள்.....!

Written By: Jagatheesh
  X

  ஆப்பிள் நிறுவனம் தற்போது மேக்புக்கிற்க்கு தேவையான அருமையான 10 துணைச் சாதனங்களை வெளியிட்டுள்ளது. இவற்றின் வருகையால் ஆப்பிள் மேக்புக்கை வைத்திருப்பவர்கள் மேலும் பயன் அடைவார்கள். இதனை பார்ப்பதற்க்கு மிகவும் சிறப்பாகவும் மற்றும் அழகாகவும் உள்ளது.

  இந்த துணைச் சாதனங்களை பயன்படுத்துவதால் ஆப்பிள் மேக்புக்கை பயன்படுத்துவது என்பது மிகவும் எளிமையாக உள்ளதாக பலர் கூறியுள்ளனர்.

  மேலும் managing cable போன்ற துணைச் சாதனங்கள் நினைவகங்களின் அளவை குறைக்க பயன்படுகிறது . மேலும் மல்டி ஸ்க்ரீன் சாதனங்கள் பார்ப்பதற்க்கு எளிமையாக இருப்பதனால் இதனை அனைவரும் விரும்புகிறார்கள்.

  இதுபோன்று 10 வகையான துணைச்சாதனங்களை பார்ப்போமா...

  ஸ்மார்ட் போன்களுக்கு

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  #1

  நிவ்டி மினி ட்ரைவு என்பது வெளிபக்க நினைவகம் எனப்படும் எஸ்.டி கார்டு . இது மேக்புக்கிற்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 64 GB அளவு நினைவகத்தினைக் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்துவதற்க்கு எளிமையாக இருப்பதனால் அனைவரும் இதனை விரும்புகிறார்கள். மேலும் இதில் நமக்கு தேவையான அனைத்து தகவல்கலையும் சேமித்து வைக்க உதவுகிறது. இதனுடைய விலையானது $39.99 டாலர்கள் ஆகும்.

  #2

  இந்த ப்ளக்பக் துணைச்சாதனம் இரண்டு சாதங்களான மேக்புக் மற்றும் ஐபாட் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயணம் செய்யும் போது மேக்புக் மற்றும் ஐபாடினை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்ய பயன்படுகிறது. இது அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடைய விலையானது $34.99 டாலர்கள் ஆகும்.

  #3

  இந்த சென்டாக் சாதனத்தில் அனைத்து வகையான இணைப்புகளும் உள்ளன. அது என்வென்றால் Firewire, USB, ethernet, Mini DisplayPort, speaker மற்றும் microphone ஆகிய இணைப்புகள் இந்த ஒரே சாதனத்தில் உள்ளன. இது அனைவராலும் விருபக்கூடிய ஒரு சாதனமாக விளங்குகிறது. இதனுடைய விலையானது $159 டாலர்கள் ஆகும்.

  #4

  இந்த சாதனம் பவர் கேபிளை பாதுகாக்க பயன்படுகிறது. இதனை பயன்டுத்தி பவர் கேபிளை எளிதாக நீக்கலாம். இதனால் பவர் கேபிள் போர்ட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்ப்படாது. இது பார்ப்பதற்கு மெட்டல் உலோகத்தால் ஆன ஒரு சிறு கம்பிபோல் இருக்கும். இதனுடைய விலையானது $19 டாலர்கள் ஆகும்.

  #5

  இந்த சாதனம் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேவாக மேக்புகில் பயன்படுத்தப்படுகிறது. இதனை மேசை மீது வைத்தும் பயன்படுத்தலாம். மேலும் புளுடூத் கீபோர்டுகளைக் கொண்டும் LapTuk Pro ஐ பயன்படுத்தலாம். இதில் புகைப்படங்கள் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனம் ஆகும்.
  இதனுடைய விலையானது $99.99 டாலர்கள் ஆகும்.

  #6

  இந்த சாதனத்தை பார்க்கும் போது லேப்டாப்பை போன்று காட்சியளிக்கும். ஏனெனில் இதில் அனைத்து வகையான போர்ட்டுகளும் இருக்கும் மற்றும் கீபோர்டும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 SuperSpeed USB 3.0 pass-through ports, Kensington Security Slot, a Mini DisplayPort மற்றும் gigabit Ethernet port போன்றவை இவற்றில் உள்ளடங்கும். இதனுடைய விலையானது $49 - $179 டாலர்கள் ஆகும்.

  #7

  இந்த சாதனம் ஆனது மேசையின் அளவை குறைப்பதற்க்காக உருவாக்கப்பட்டது. மேலும் இது எளிமையாக இருப்பதனால் இதனை பயன்படுத்த வசதியாக உள்ளது. இதனுடைய விலையானது $55 - $74.95 டாலர்கள் ஆகும்.

  #8

  இந்த சாதனத்தை கொண்டு உங்கள் மேக்புகிலிருந்து மேலும் இரண்டு மானிட்டர்களை இணைக்க முடியும். இந்த சாதனத்தில் உள்ள Thunderbolt portஐ பயன்படுத்தி மேலும் இரண்டு மானிட்டர்களை இணைக்கலாம். இதனுடைய விலையானது $160 டாலர்கள் ஆகும்.

  #9

  இந்த சாதனம் ஆனது சிறிது Henge Dock சாதனத்தை போன்றது தான். ஏனெனில் இவற்றின் பயன்பாடனது மேசையின் அளவை குறைப்பதாகும். மேலும் இது anodized aluminium body ஆல் செய்யப்பட்டு இருப்பதால் மேக்புக்கை வெப்பத்திலிருந்து காக்கிறது. இதனுடைய விலையானது $49.90 டாலர்கள் ஆகும்.

  #10

  இந்த கேபிளைக்கொண்டு உங்கள் மேக்புக்கை தொலைவிலிருந்தும் சார்ஜ் செய்ய முடியும். ஏனெனில் இது மிகவும் நீளமான கேபிளாகும். இதனுடைய விலையானது $9.99 டாலர்கள் ஆகும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்மார்ட் போன்களுக்கு

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more