Home
Computer

அடுத்து ஆகாஷ்-2 ஒரு லட்சம் டேப்லட்கள் வெளியீடு!

By Super

அடுத்து ஆகாஷ்-2 ஒரு லட்சம் டேப்லட்கள் வெளியீடு!
1 லட்சம் ஆகாஷ்-2 டேப்லட்கள் இந்த மாதத்தில் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. குறைந்த விலை கொண்ட டேப்லட் என்று மக்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய டேப்லட் ஆகாஷ்.

இந்த டேப்லட் குறைந்த விலையில் மாணவர்களுக்காக கொடுக்கப்பட இருந்தது. ஆனால் இதன் தொழில் நுட்பம் சிறந்த வகையில் இல்லை என்று இதன் வெளியீடு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக ஆகாஷ்-2 டேப்லட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆகாஷ்-2 டேப்லட் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சோதனைக்காக ஐஐடி பாம்பேவிற்கு 100 டேப்லட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த சோதனை முடிந்து இன்னும் இரண்டு வாரத்தில் இந்த ஆகாஷ்-2 டேப்லட் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆகாஷ் டேப்லட் 366 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரை கொண்டது. ஆகாஷ்-2 டேப்லட் கார்டெக்ஸ் ஏ-8 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரை கொண்டதாக இருக்கும்.

முந்தைய வெர்ஷனான ஆகாஷ் டேப்லட் 7 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். ஆனால் ஆகாஷ்-2 டேப்லட் 7 இஞ்ச் மல்டி தொடுதிரை வசதியினை வழங்கும்.

ஆகாஷ்-2 டேப்லட் 256 எம்பி ரேம், 2 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும் இந்த டேப்லட் கொண்டிருக்கும். 32 ஜிபி இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் செய்யும்.

இதன் 3,200 எம்ஏஎச் பேட்டரியினையும் கொண்டாத இருக்கும். இந்த பேட்டரி பேக்கப் மூலம் யூஎஸ்பி, புளூடுத், வைபை என்று சகல வசதிகளுக்கும் இந்த டேப்லட் சப்போர்ட் செய்யும்.

யுபிஸ்லேட்-7 + மற்றும் யுபிஸ்லேட்-7 சி டேப்லட்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் யுபிஸ்லேட்-7 + டேப்லட்டிற்கு மட்டும் இதுவரை 34 லட்சம் ப்ரீ-ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லட் வருகிற ஆகஸ்டு மாதம் வெளியாகும்.

ஆகாஷ்-2 டேப்லட் வெளியாக நீண்ட நாள் காத்திருக்க வேண்டுமோ? என்றெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த மாதமே கூடிய விரைவில் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக ஆகாஷ்-2 டேப்லட் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X