விரைவில் புதிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள்: எச்பி அறிவிப்பு

Posted By: Staff

விரைவில் புதிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள்: எச்பி அறிவிப்பு
உலக அளவிலும் இந்திய அளவிலும் அதிக அளவில் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்புகளை வழங்கி வரும் எச்பி என்று செல்லமாக அழைக்கப்படும் ஹிவ்லட் பேக்கர்ட் என்ற நிறுவனம் கனணி பொருள்களின் தரத்திற்கும், ஸ்டைலுக்கும் பெயர் பெற்றதாகும். அவர்களுடைய தயாரிப்புகள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழ்கின்றனர்.

சந்தையின் தேவை மற்றும் போட்டியையும் கருத்தில் கொண்டு புதிதாக எச்பி ப்ரோபுக் 'எம்' சீரிஸ் மற்றும் எலைட்புக் 'பி' சீரிஸ் லாப்டாப்கள் மற்றும் ஹச்பி 2560பி டாக்கிங் ஸ்டேஷன் ஆகியவற்றை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இரண்டு லேப்டாப் சீரிஸ்களுமே எச்பியின் புகழ்பெற்ற எப்ஒஆர்ஜிஇ வடிவமைப்பில் உருவாக்கப்படுகின்றன. புதிய படைப்புகள் இரண்டுமே ஹச்பி எலைட் புக் 2560பி எலைட்புக் சீரியஸிலிருந்து வருகிறது.

ஹச்பி எலைட் புக் 2560பி லாப்டாப் 12.5 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே கொண்டிருப்பதால் க்ராபிக்ஸ் வீடியோஸ் மற்றும் விளையாட்டுகளை தெளிவாக இயக்க முடியும். இது 1.63 கிலோ எடைகொண்டது. மேலும் இது ஸ்டாண்டர்டு வோல்டேஜ் ப்ராஸஸர் மற்றும் ஆப்டிக்கல் ட்ரைவ் கொண்டுள்ளது. இதனால், இதன் பேட்டரி நீண்ட நேர பேக்கப்பை தரும்.

அடுத்த தயாரிப்பான ஹச்பி ப்ரோபுக் 5330எம் 1இன்ச் அளவைவிட தடிமன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் டூவல்-டோன் கலரில் வருவதால், கவர்ச்சிக்கு குறைவிருக்காது. அதோடு அலுமினியம் சேஸிஸ் மற்றும் ப்ளாக்லிட்டாலான கீபோர்டைக் கொண்டுள்ளது. இது பீட்ஸ் ஆடியோ தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் பாடல்களை கேட்கும்போது பரவசமாக இருக்கும்.

ஹச்பி எலைட் புக் 2560பி லேப்டாப் வியாபாரம் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்களுக்கான விஷேச அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் யுஎஸ்பி போர்ட், விஜிஏ போர்ட், ஹச்எம்ஐ போர்ட் மற்றும் இஎஸ்எடிஏ போர்ட் ஆகியவை உள்ளன. இந்த லேப்டாப்புகள் ரூ. 40000லிருந்து ரூ.80,000 விலையில் மார்க்கெட்டிற்கு வர இருக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்