புதிய டேப்லெட் விரைவில் அறிமுகம் செய்ய அமேசான் திட்டம்

இந்த நிலையில், ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் டேப்லெட் தயாரிப்பில் இறங்கியுள்ளது. விரைவில் 7 இஞ்ச் திரை கொண்ட புதிய டேப்லெட் கம்ப்யூட்டரை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவிலும், இந்த புதிய டேப்லெட்டை அமேசான் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான நெட்வொர்க்கை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டபோதிலும், எந்த வெர்ஷனில் இயங்கும் என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை.
இன்டர்நெட்டில் உலவும் தகவல்களின்படி, தைவான் நாட்டை சேர்ந்த குவாண்ட்டா என்ற நிறுவனம், அமேசானுக்கு இந்த டேப்லெட்டை தயாரித்து வழங்க இருப்பதாக தெரிவிக்கின்றன. தனது அனைத்து நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த டேப்லெட்டை குவாண்ட்டா தயாரித்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமக்கு கிடைத்தள்ள தகவல்களின்படி, மாதத்திற்கு 10 லட்சம் டேப்லெட்டுகளை அமேசானுக்கு குவாண்ட்டா தயாரித்து வழங்க இருப்பதாக தெரிகிறது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் புதிய டேப்லெட் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.
உலக அளவில் அமேசான் கிளவுட் டிரைவர் மற்றும் அமேசான் அப் ஸ்டோர்கள் பரந்து விரிந்த நெட்வொர்க்கை கொண்டிருக்கின்றன. இதனால், அமேசான் அறிமுகப்படுத்தும் புதிய டேப்லெட் கம்ப்யூட்டரும் மார்க்கெட்டில் விரைவில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது.
மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் ஆப்பிள் ஐபேடு மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் ஆகிய டேப்லெட்டுகளைவிட குறைந்த விலையில் இந்த டேப்லெட்டை அமேசான் மார்க்கெட்டில் இறக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த விலையில் அறிமுகப்படுத்துவதற்காக கேமரா இல்லாமலும், குறைந்த சேமிப்பு திறன் கொண்ட ஹார்டு டிஸ்க்குடன் இந்த டேப்லெட் வரலாம் என்று கருதப்படுகிறது. ஆன்லைனில் வர்த்தகத்தில் வலுவான அடித்தளத்தை கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டை எளிதாக அமேசான் மார்க்கெட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications