Home
Computer

தோஷிபா மற்றும் லெனோவா புதிய நோட்புக்குகள் ஒப்பீடு

By Super
தோஷிபா மற்றும் லெனோவா புதிய நோட்புக்குகள் ஒப்பீடு
இந்திய சந்தைக்கு புதிதாக அறிமுகமாக உள்ளது தோஷிபா போர்டேஜ் சி830.அதே போல் லெனோவா ஐடியாப்பேட் யூ300எஸ் கணினியும் அறிமுமாக உள்ளது. இந்த இரண்டிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த இரண்டு மாடலிலுமே உயர்ந்த தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.அதன் பயன்பாடுகள் எந்த அளவு உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அல்டரா புக்ஸில் கணினி பற்றிய அனைத்து விதமான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.அதிலும் குறிப்பாக சிறிய,இலகுவான எடைகொண்ட கணினியின் சிறப்பு அம்சங்கள் ஏராலமாக வழங்கப்பட்டுள்ளன.

ஏனென்றால் எடுத்துச்செல்வதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த இரண்டு மாடலிலுமே இன்டல் பிரிட்ஜ் அல்ட்ரா லோ வால்டேஜ் கோர் ஐ3/ஐ7 பிராசஸர்ஸ்(யூஎல்வி) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லெனோவா 300எஸ் மாடல் 13.3 இன்ச் சூப்பர் ஸ்லிம் திரை அம்சம் மட்டும் அல்லாது இன்னும் பார்ப்பதற்கே மிகவும் அழகானத் தோற்றம் கொண்டதாக வெளிவரும். அது போல் தோஷிபா போர்டேஜ் சி 830 மாடல் உங்களுக்கு 13.3 இன்ச் திரை அம்சம் கொண்டதாக மட்டும் அல்லாது கன்ஸ்யூமர் மாடல் மற்றும் பிஸினஸ் மாடல் என்று இரண்டு வகையிலுன் வெளிவரப் போகிறது.

லெனோவா அல்ட்ராபுக்ஸ் விவரத்தின்படி சி 830 மாடல் 15.9 எம்எம் அளவு கொண்டதாக இருக்கும் பட்சத்தில் யூ300 மாடல் 14.9எம்எம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னொரு புரம் சி830 மாடலின் எடை 2.45 பவுன்ட்ஸ் என்றால் லெனோவா யூ300எஸ் 2.91 பவுண்ட்ஸ் எடைக் கொண்டதாக உள்ளது.

சி 830மாடல்,யூ300எஸ் மாடலைக்காட்டிலும் மிகவும் சிறிய அளவு இலகுவான எடை கொண்டதாகத் தெரிய வருகிறது.டோஷிபா போர்டேஜ் சி 830,கன்ஸ்யூமர் மாடலில் யூஎல்வி கோர் ஐ3 பிராசஸர் வசதி கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதன் விலையும் மிக அதிகமாக இல்லை என்பது ஆச்சர்யத்தை அளிக்கின்றது. லெனோவா யூ300எஸ் மாடல் யூஎல்வி கோர் ஐ7 பிராசஸருடன் 4எம்பி எல்3 கேச்சி வசதி கொண்டுள்ளதாகவும் இருக்கின்றது.

இதனால் மிகவும் வேகமான முறையில் தகவல்களை தேட முடியும்.அதனால் இதன் விலை சற்று உயர்வாக உள்ளது என்பதும் தெரிய வருகிறது. இந்த இரண்டு மாடலிலுமே எஸ்எஸ்டி(சாலிட் ஸ்டேட் டிரைவ்) வசதி கொடுக்கப்பட்டுள்ளன.

யூ300எஸ் மாடலில் 256 ஜிபி எஸ்எஸ்டி 10 நிமிடம் என்ற இதன் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. போர்டேஜ் சி 830 மாடலில் 128 எஸ்எஸ்டி வேகம் மட்டுமே கொண்டுள்ளது. யூ300எஸ் மற்றும் சி 830 என்ற இந்த இரண்டு மாடலிலுமே 720பி ஹெச்டி ப்ளேபேக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

1366 X 768 பிக்ஸல் ரிசல்யூஷனும்,16:9 ரேஷியோவும் கொண்டது.இந்த இரண்டு மாடலின் அனைத்து விவரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ரசனைக்கு ஏற்றவாறு இதில் எந்த மாடல் உள்ளதோ அதை நீங்கள் எளிதாகத் தேர்வு செய்து கொள்ளலாம்.

சி 830 மெக்னீஷியம் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இதனுயை நுட்பமான வடிவமைப்பு பிசினஸ் கணினிக்கு உண்டான ஒரு தோற்றத்தை அளிக்கிறது. யூ300எஸ் சிலிமென்டைனால் ஆரென்ச்,அலுமினியம் ச்சேசைஸ் கொண்டு கிராஃபைட் கிரே நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கிளாஸ் டச்பேட் மற்றும் கண்கவரும் வளைவுகளும் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.இதன் அழகான தோற்றத்தில் இருந்து உங்களால் கண்களை அகற்றவே முடியாது என்பதை நிச்சயமாகக் கூறமுடியும். லெனோவா ஐபேட் யூ300எஸ் 4செல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 8 மணி நேரம் தொடர்ந்து உழைக்கக்கூடியது.

சி 830 மாடலிலும் 8 செல் ப்ரிஸ்மே

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X