Home
Computer

எல்ஜி ஆப்டிமஸ் பேட் vs சாம்சங் கேலக்ஸி டேப் 8.9: ஒப்பீடு

By Super
எல்ஜி ஆப்டிமஸ் பேட் vs சாம்சங் கேலக்ஸி டேப் 8.9: ஒப்பீடு
கடந்த சில ஆண்டுகளாக எல்ஜியும் சாம்சங்கும் இந்திய மொபைல் சந்தையில் பலவிதமான தரமான மொபைல்களை பலவிதமான விலைகளில் போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுமே தங்களது புதிய கெட்ஜெட் மூலம் கனிணி சந்தையில் களமிறங்க இருக்கின்றன.

எல்ஜி நிறுவனம் எல்ஜி ஆப்டிமஸ் பேட் என்ற டேப்லெட்டையும், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் 8.9 என்ற டேப்லெட்டையும் களமிறக்குகின்றன. இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே இந்திய சந்தையில் பெரிய புயலை ஏற்படுத்தும் என நம்பலாம்.

இந்த இரண்டு கெட்ஜெட்டுகளுமே அட்டகாசமான் ஸ்டைலுடன் வருகின்றன. எல்ஜி ஆப்டிமஸின் பரப்பளவைப் பார்த்தால் அது 243.8x150x12.7 மிமீ ஆகும். இதன் எடை சாம்சங்கின் கேலக்ஸி டேப்பைவிட சற்று அதிகமாக இருக்கும். அதாவது இதன் எடை 621 கிரமாகும். அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி 470 கிராம் எடையையும் 230.9 x 157.8 x 8.6 மிமீ மொத்த பரப்பையும் கொண்டுள்ளது. ஆப்டிமஸ் பேட் கேலக்ஸி டேப்பை விட சற்று தடிமனாக இருக்கும்.

இரண்டு டிவைஸ்களுமே ஆன்ட்ராய்டு 3.0 இயங்குதளம் அல்லது ஆன்ட்ராய்டு ஹனிகோம் இயங்குதளத்தில் இயங்குகின்றன. இரண்டுமே டேக்ரா 2 டி20 சிப்செட்டில் இயங்கக்கூடிய 1ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர்களைக் கொண்டுள்ளன. கேமராவைப் பொருத்தவரை ஆப்டிமஸ் பேட் மிக பக்காவாக உள்ளது.

இது டூவல் 5எம்பி முகப்பு கேமராக்களைக் கொண்டுள்ளது. இந்த 5எம்பி கேமரா மூலம் 3டி வீடியோவை அழகாக எடுக்க முடியும். அதே நேரத்தில் இது இன்னொரு 2எம்பி முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் கேலக்ஸி டேப் எல்இடி ப்ளாஷ் கொண்ட 3எம்பி ரியர் கேமராவையும் வீடியோ காலிங் செய்ய 2எம்பி முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது.

இரண்டு டிவைஸ்களின் தொடுதிரைகளைப் பார்த்தால் அவை 8.9 இன்ச் அளவைக் கொண்டுள்ளன. அதுபோல் இந்த டிஸ்ப்ளே 16எம் நிறங்களை சப்போர்ட் செய்யும். சாம்சங்கின் டிஸ்ப்ளேயில் டிஎப்டி வசதியும் உள்ளது. சாம்சங் லை-பிஒ 6000 மெகா ஹெர்ட்ஸ் பேட்டரியைக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் எல்ஜி ஸ்டேண்டர்ட் லையன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியின் ஸ்டேண்ட் பை நேரம் 273 மணியாகும். அதே நேரத்தில் இதை 9 மணி நேரம் வரை உபயோகித்தாலும் இதன் பேட்டரி தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளது.

இணைப்பு வசதியைப் பார்க்கும் போது ஆப்டிமஸ் பேட் தொலைப் தொடர்பு வசதி கொண்டிருக்கவில்லை. அதனால் இந்த டிவைஸில் கால் செய்ய முடியாது. ஆனால் சாம்சங் கேலக்ஸி ஜிஎஸ்எம் வாய்ஸ் கம்யூனிகேசன் சப்போர்ட்டை வழங்குகிறது. இரண்டுமே யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளைக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் எல்ஜி ஆப்டிமஸ் பேட் ப்ளூடூத் 2.1யும் சாம்சங் கேலக்ஸி ப்ளூடூத் 3.0யும் கொண்டுள்ளன. இரண்டிலுமே இன்ப்ரேர்டு போர்ட்டுகள் இல்லை. ஆனால் இரண்டுமே எச்டிஎம்எல் பிரவுசரையும் மற்றும் புஷ் மெயில் வசதியையும் கொண்டுள்ளன.

பைல்களை எடிட் செய்யும் வசதியையும் அதுபோல் ப்ளாஷ் பைல்களை சப்போர்ட் செய்யும் வசதியையும் இரண்டு டிவைஸ்களுமே வழங்குகின்றன. இரண்டுமே ஆன்ட்ராய்டு வசதியைக் கொண்டிருப்பதால் இதில் நாம் ஏராளமான அப்ளிகேசன்களைப் பெற முடியும். மேலும் இரண்டும் ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்தாலும் எல்ஜி மிகத் தரமான மியூசிக் ப்ளேயர் இன்டர்பேசைக் கொண்டுள்ளது. அதுபோல் இதில் எச்டி வீடியோ ப்ளேபேக்கும் உள்ளது.

விலையைப் பொருத்தமட்டில் எல்ஜி ஆப்டிமஸ் பேட் ரூ.30,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி டேப்பும் இதே விலையில் வரும் என நம்பலாம். ஆனால் எல்ஜியில 3டி கேமராவும் எல்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X