புதிய யு சீரீஸ் லேப்டாப்புகள் - லினோவா அறிவிப்பு

By Super
|
புதிய யு சீரீஸ் லேப்டாப்புகள் - லினோவா அறிவிப்பு
லினோவா நிறுவனம் பக்காவான 3 புதிய ஸ்டைலான ஸ்லீக் டிஸைனுடன் லேப்டாப்புகளை களமிறக்கவிருக்கிறது. இந்த லேப்டாப்புகள் சிறந்த தொழில் நுட்பத்துடன் ஸ்டைலையும் சொகுசையும் விரும்புபவர்களுக்காகவே லினோவாநிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. அந்த லேப்டாப்புகள் முறையே ஐடியாபேட் யு300எஸ் அல்ட்ராபுக், யு300 மற்றும் யு400 ஆகும்.

இமைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கக்கூடிய அளவிற்கு இந்த மூன்று லேப்டாப்புகளும் அந்த அளவிற்கு மிக அழகாக வரவிருக்கின்றன. ஐடியாபேட் யு300எஸ் அல்ட்ராபுக் மெல்லியதாக மிக ஸ்டைலாக இருக்கும். 2ஜி இண்டல் கோர் ஐ7 ப்ராஸஸர் மற்றும் இண்டல் டர்போ பூஸ்ட் 2.0 தொழில்நுட்பத்துடன் மிகுந்த செயல்திறத்துடன் இருக்கும்.

மின்விசையை தட்டிய 10 வினாடிகளுக்குள் லேப்டாப்பின் மானிட்டரில் மெனு வந்துவிடும். அந்த அளவிற்கு திறன் வாய்ந்திருக்கிறது. மேலும் இந்த லேப்டாப்பை சிறந்த தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பதற்காக 4ஜிபி டிடிஆர்3 ராம் உள்ளது.

அது லேப்டாப்புக்கு தேவையான குளிர்ச்சியைக் கொடுக்கும். ஆனால் இதன் எஸ்எஸ்டியில் உள்ள சேமிப்பு வசதி 256ஜிபி மட்டுமே. ஆனால் இதன் ஹச்டிடியின் சேமிப்பு வசதி 1டிபி வரை விரிவுபடுத்தக்கூடிய வசதியைக் கொண்டது.

மேலும் இதில் ஹச்டி இபக்ட் பக்காவாக உள்ளது. அதாவது இது 16.9 இன்ச் அகல திரை கொண்டு 13.3 இன்ச் மெல்லிய டிஸ்ப்ளே கொண்டிருப்பதால் இதன் ஹச்டி இபக்ட் நம் வாயை பிளக்க வைத்துவிடும். இதன் எடை 3 பவுண்டை விட குறைவே.

மேலும் இது ஒற்றை அலுமினிய தகட்டால் செய்யப்பட்டு க்ராபைட் க்ரே மற்றும் க்ளமென்டைன் ஆரஞ்ச் போன்ற இண்டு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் கீறல் மற்றும் கோடுகள் விழாத பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இதன் கீபோர்டின் ஸைட்ஸ் மற்றும் ரியர் ஹின்ச் இதில் வேலை செய்ய மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.

இதன் பேட்டரி திறனைப் பார்த்தால் 30 நாட்கள் வரையான ஸ்டான்டர்ட் பேக்கப்பையும் மின் இணைப்பு இல்லாமல் 8 மணி நேரம் செயல்படக்கூடிய பேக்கப்பையும் கொண்டுள்ளது.

இதன் பேட்டரியை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே பாதி மின்திறனைப் பெற்றுவிடும். மேலும் யுஎஸ்பி 2.0 மற்றும் 3.0 போர்ட்டுகள், வைபை 802.11 பி/ஜி/என் (அதி வேகம்) ப்ளூடூத் இணைப்பு மற்றும் 720பி வெப்கேம் ஆகியவை இந்த லேப்டாப்புக்கு இன்னும் பெருமை சேர்க்கின்றன.

ஐடியாபேட் யு300 மற்றும் யு400 ஆகியவை ஸ்டைலிலும் தொழில் நுட்பத்திலும் தனித்துவம் கொண்டுள்ளன. இவற்றை 17 வினாடிகளில் பூட்டிங் செய்ய முடியும். இவற்றிலும் ரேப்பிட்ரைவ் எஸ்எஸ்டி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு லேப்டாப்புகளும் இண்டல் கோர் 2ஜி ப்ராஸஸரைக் கொண்டிருக்கின்றன. யு300 13.3 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில் யு400 14 இன்ச் டிஸ்ப்ளேயுடன் எஎம்டி ரேடியோன் ஹச்டி5470எம் 1ஜிபி க்ராபிக்ஸ் அக்ஸிலரேட்டர் கார்டைக் கொண்டுள்ளது. அதனால் இதில் வீடியோ கேமும் ஹச்டி வீடியோவும் மிக அற்புதமாக இருக்கும். இந்த இரண்டு லேப்டாப்புகளுமே 8ஜிபி டிடிஆர்3 வரை கொண்ட ராமையும் மற்றும் 1டிபி ஹச்டிடி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவு சேமிப்பு வசதியும் கொண்டுள்ளன.

யு400ல் இன்டக்ரேட்டட் டிவிடி ட்ரைவும் உள்ளது. பேட்டரியின் மின் திறனை எடுத்துக்கொண்டால் மின் இணைப்பு இல்லாமல் யு300ஐ 6 மணி நேரமும் யு400ஐ 7 மணி நேரமும் இயக்க முடியும். யு300எஸ்ஸில் உள்ள அதே கீபோர்ட் இந்த இரண்டிலும் உள்ளன.

யு300எஸ்ஸைப் போன்றே க்ராபைட் க்ரே மற்றும் க்ளமென்டைன் ஆரஞ்ச் போன்ற இண்டு வண்ணங்களில் இந்த இரண்டு லேப்டாப்புகளும் கிடைக்கும். இவற்றின் விலைய

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X