Home
Computer

பொழுதுபோக்கு அம்சங்களுடன் வருகிறது புதிய எச்பி லேப்டாப்

By Super
பொழுதுபோக்கு அம்சங்களுடன் வருகிறது புதிய எச்பி லேப்டாப்
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த லேப்டாப்புகளுக்கும் கனிணிகளுக்கும் இந்தியாவில் அமோக வரவேற்பு உள்ளது. இனிமேல் கணினிகள் வெறும் வேலை செய்யக்கூடிய கருவிகளாகவோ அல்லது தகவல்களைப் பதிவு செய்து வைக்கும் கருவிகளாகவோ மட்டும் இருக்கப்போவதில்லை.

மாறாக ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி நம்மை மகிழ்விக்கும் நண்பர்களாக இருக்கப்போகின்றன. நமது மக்கள் திரையரங்கில் படம் பார்ப்பதுபோல் வீட்டிலும் அதே தரத்தில் படம் பார்க்க விரும்புகின்றனர். அதை சவாலாக எடுத்துக் கொண்டு கனிணி தயாரிப்பாளர்கள் அப்படிப்பட்ட தரம் வாய்ந்த கனிணிகளை தயாரித்து அதை குறைந்த விலையிலும் தருவதற்கு பெரு முயற்சி எடுத்து வருகின்றனர்.

ஏனெனில் பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் குறைந்த விலை அல்லது நடுத்தர விலையிலிருக்கும் மொபைல்கள், டேப்லட்டுகள், கனிணிகள் மற்றும் லேப்டாப்புகளை வாங்குகின்றனர்.

இவ்வாறு இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கணினிகளையும் லேப்டாப்களையும் தயாரித்து அவற்றை குறைந்த விலையில் அளிப்பதில் எச்பி நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. அதுவே எச்பியின் வியாபார உத்தியாகவும் இருக்கிறது.

மலிவு விலையில் மட்டும் அல்ல. பண்டிகை காலங்களிலும் தமது தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வசதியையும் வழங்குகிறது. அதனால் அந்த நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் நிரந்தர இடம் இருக்கிறது.

தற்போது புதிதாக எச்பி பெவிலியன் டிவி6-6165டிஎக்ஸ் என்ற புதிய லேப்டாப்பை எச்பி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த லேப்டாப்பை நாம் ஒரு பொழுதுபோக்கு நோட்புக் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இது ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது 2.2ஜிஹெர்ட்ஸ் திறன் கொண்ட இன்டல் கேர் ஐ7-2670க்யுஎம் ப்ராசஸர் கொண்டுள்ளது. அதோடு க்ராபிக்ஸ் வசதிகளுக்காக எஎம்டி க்ராபிக்ஸ் கார்டு மற்றும் ரேடியோன் எச்டி 6770எம் மற்றும் 16ஜிபி டிடிஆர்3 வரை விரிவுபடுத்தக்கூடிய 4ஜிபி மெமரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இன்டலின் எச்எம்65 எக்ஸ்ப்ரஸ் சிப்செட்டையும் கொண்டுள்ளது. மேலும் இது 6எம்பி எல்3 மைக்ரோ கேச்சையும் பெற்றுள்ளது.

எச்பி பெவிலியன் டிவி6-6165டிஎக்ஸ்ஸின் டிஸ்ப்ளே உயர் டெபினிசன் எல்இடி கொண்டு வருகிறது. அதாவது இதன் எச்பி ப்ரைட்வியூவ் டிஸ்ப்ளே 15.6 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் எஸ்எடிஎ ஹார்ட் டிஸ்கின் சக்தி 750 ஜிபி ஆகும். இதிலுள்ள ஒலி அமைப்புக்காக இது பீட்ஸ் சிஸ்டத்தை வழங்குகிறது. மல்டி மீடியா வசதிகளுக்காக இது சூப்பர் மல்டி டிவிடி+ஆர்/ஆர்டபுள்யு ட்ரைவை வழங்குகிறது. இந்த ட்ரைவ் டபுள் லேயர் சப்போர்ட்டை வழங்கும்.

எச்பி பெவிலியன் டிவி6-6165டிஎக்ஸ் பேக்லிட் கீபோர்டைக் கொண்டுள்ளது. அதனால் இது மிக ஸ்டைலாக இருக்கும். மேலும் இதில் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 இயங்குதளம், வெப்காம், கைரேகை ரீடர் மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவை ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல் ஜிகாபிட் எர்த்நெட் லேன், வைபை, டிஜிட்டல் மல்டி மீடியா கார்டு மல்டி பார்மட் ரீடர், ஆப்டிக்கல் ட்ரைவ் மற்றும் 2 யுஎஸ்பி 2.0 மற்றும் யுஎஸ்பி 3.0 போர்ட்டுகளையும் கொண்டுள்ளது. இதில் எடிஎம்ஐ மற்றும் விஜிஏ அவுட்டுகளும் உள்ளன.

எச்பி பெவிலியன் டிவி6-6165டிஎக்ஸ்ஸை எச்பியின் சிறந்த லேப்டாப் என்று அழைக்கலாம். ஏனெனில் எல்லா வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு இது அள்ளித் தெளிக்கிறது. இதன் விலை ரூ.55,000லிருந்து ரூ.60,000க்குள் இருக்கும். இந்தியர்களின் எண்ணங்களைக் கவரும் புதி

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X