'டல்'லை விரட்டும் டெல் லேப்டாப்!

By Super
|
'டல்'லை விரட்டும் டெல் லேப்டாப்!
டெல் நிறுவனம் டெல் வோஸ்ட்ரோ 3350 என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த லேப்டாப்பில் மின் திறன் பிரச்சினை இருக்காது என்பதோடு அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

குறிப்பாக இந்த லேப்டாப் குறைந்த எடையுடன் வருவதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்லலாம். குறிப்பாக அதிகமாக பயணம் செய்யும் வர்த்தகர்களுக்கு இது பெரிய துணையாக இருக்கும்.

டெல் வோஸ்ட்ரோ 3350ன் டிசைனைப் பார்த்தால் அது கட்டிங் எட்ஜ் கொண்டு மிக சூப்பராக இருக்கிறது. இந்த லேப்டாப் 13.3 இன்ச் திரையை கொண்டுள்ளது. மேலும் இது ஆண்டி க்ளேர் வசதி கொண்டு வருகிறது. தொடர்புக்காக இதில் ஒரு இண்டக்ரேட்டட் வெப்கேம் உள்ளது.

இதன் கேமரா இன்டக்ரேட்டட் எப்எச்டி தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது தரமான மைக்ரோபோனையும் கொண்டுள்ளது. இதனால் சாட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகியவற்றை இதில் பிரச்னையில்லாமல் அரங்கேற்றலாம்.

டெல் வாஸ்ட்ரோ 3350 2.20 ஜிஹெர்ட்ஸ் கொண்ட 2ஜி இன்டல் கோர் ஐ3 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதுபோல் டர்போ பூஸ்ட் கொண்ட ஐ5 துணைப் ப்ராசஸரும் இதில் உள்ளது. மேலும் இது விண்டோஸ் 7 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதன் மெமரியைப் பார்த்தால் அது டிடிஆர்3யுடன் 4ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. இதன் ஹார்ட் ட்ரைவ் 500ஜிபி சேமிப்பைக் கொண்டுள்ளது.

டெல் வாஸ்ட்ரோ 3350 லேப்டாப்பின் மின் திறன் பேக்கப் மிக அபாரமாக உள்ளது. அதாவது இது 4 செல் லித்தியம் அயான் பேட்டரி கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இதைப் பயன்படுத்துவோர் இதில் 8 செல் லித்தியம் ஐயன் பேட்டரியையும் உபயோகிக்கலாம். ஆனால் அதற்கு 90 வாட் மெல்லிய ஏசி அடாப்டர் தேவைப்படும்.

டெல் வாஸ்ட்ரோ 3350ல் ப்ளூடூத் இணைப்பு, யுஎஸ்பி இணைப்பு மற்றும் 8 இன் 1 கார் ரீடர் போன்றவை உள்ளன. இவற்றின் மூலம் விரைவாக தகவல் பரிமாற்றம் செய்ய இயலும். இதன் கீபோர்டில் டைப் செய்யும் போது மிக அற்புதமாக இருக்கும்.

மேலும் பேக்கப் வசதிகளான டேட்டாசேப் ஆன்லைன் மற்று ரிகவரி மேனேஜர் போன்றவற்றை இந்த லேப்டாப் கொண்டிருப்பதால் நமது தகவல்கள் மற்றும் பைல்கள் சேதமடையாமல் திரும்ப பெறலாம்.

டெல் வாஸ்ட்ரோ 3350 பல நிறங்களில் வருகிறது. அதாவது லுசெரின், சிவப்பு, அபர்டீன் சில்வர் மற்றும் பிரிஸ்பேன் பிரான்ஸ் போன்ற நிறங்களில் வருகிறது. வரிகளை சேர்க்காமல் டெல் வாஸ்ட்ரோ 3350 ரூ.39,990க்கு வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X