சிடிஎம்ஏ நெட்வொர்க்கில் இயங்கும் புதிய டேப்லெட்: எம்டிஎஸ் மும்முரம்

By Super
|
சிடிஎம்ஏ நெட்வொர்க்கில் இயங்கும் புதிய டேப்லெட்: எம்டிஎஸ் மும்முரம்
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் புதிய டேப்லெட்டை எம்டிஎஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது 2.3 இஞ்ச் அளவு கொண்ட திரை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் உள்ள அனைத்து டேப்லெட்டுகளும் ஜிஎஸ்எம் நெட்வொர்க்கை மட்டுமே சப்போர்ட் செய்யும். ஆனால், எம்டிஎஸ் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் சிடிஎம்ஏ நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த ஆண்டின் கடைசியில் எம்டிஎஸ் ஆன்ட்ராய்டு டேப்லட்டுகள் வெளியிடப்படும் என்று எம்டிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியான திரு.சேவாலட் ரோசானவ் கூறினார். பல்வேறு நிறுவனங்களின் டேப்லெட்டுகளை எம்டிஎஸ் தொலைதொடர்பு நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

ஆனால் இந்த புதிய எம்டிஎஸ் எம்டேக் 3.1 ஹுவெய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இன்னொரு டேப்லெட்டான லைவ் வயர், இசட்.டி.இ., நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், ஹுவெய் நிறுவனம் தயாரித்து வழங்கிய புதிய டேப்லெட்டை எம்டிஎஸ் எம்டிஏஜி-3.1 என்ற பெயரில், இசட்.டி.இ நிறுவனம் தயாரித்து வழங்கிய டேப்லெட்டை எம்டிஎஸ் லைவ்ஒயர் என்ற பெயரில் எம்டிஎஸ் அறிமுகம் செய்தது.

ரூ.5,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு டேப்லெட்டுகளும், வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்ய எம்டிஎஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய டேப்லெட் சிடிஎம்ஏ நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் என்று எம்டிஎஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் எளிமையான முறையில் உங்களால் நெட் வசதியை அணுக முடியும். ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனான எச்டிசி ப்ளஸ் மாடல் மக்களிடையே மிகந்த வெற்றியையும்,வரவேற்பையும் பெற்றது. அது போல் எம்டிஎஸ் ஏன்ராய்டு டேப்லட்டுகளும் சிறந்த நெட்வொர்க்கையும்,மிகுந்த வேகத்தையும் பெற்றுள்ளது.

அதி வேகமாக செயல்படும் இந்த எம்டிஎஸ் ஏன்ராய்டு டேப்லட்டுகள் ஓஎஸ் ஏன்ராய்டு மூலம் விரைவில் தகவல்களைத் தேடித்தருகின்றது. இதில் உயர்ந்த ரக கேமரா பொருத்தப்படும் என்பதால் சிறப்பான முறையில் புகைப்படம் எடுக்கவும்,வீடியோ எடுக்கவும் முடியும்.

இதில் உள்ள ஸ்பீக்கர் வசதியினால் குரல்களைத் துள்ளியமாகக் கேட்கமுடியும்.ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் வசதியும் மற்றும் 3ஜி/வைபை வசதியையும் கொண்டிருக்கும்.

டேட்டா வசதிகள்,ஃப்ரீ எஸ்எம்எஸ்,ஃப்ரீ கால்ஸ்,போன்ற வசதிகளும் உள்ளது. இத்தனை அற்புதமான வசதிகளைக் கொண்ட இந்த டேப்லட்டுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வர உள்ளது. இப்படிப்பட்ட தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட இந்த டேப்லட்டுகள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று நிச்சயமாகக் கூறமுடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X