புதிய சூப்பர் டேப்லெட்: மெர்குரி அறிமுகம்

Posted By: Staff

புதிய சூப்பர் டேப்லெட்: மெர்குரி அறிமுகம்
மெர்குரி நிறுவனம் எம் டாப் என்ற தனது புதிய டாப்லட்டை இந்திய சந்தையில் களமிறகியுள்ளது. இந்த டாப்லட் தரத்தில் சிறந்ததாக இருக்கிறது. இது 19.3செமீ X 11.7 செமீ X1.4செமீ. என்ற அளவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடுதிரை டிஎப்டி எல்சிடி வசதியைக் கொண்டிருக்கிறது. இதன் மொத்த எடையே 400 கிராம் மட்டுமே. இந்த டாப்லட் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ்ஸில் இயங்குகிறது. மேலும் இது 1ஜிஹச்ஸட் 3 கோர் ப்ராஸஸரைக் கொண்டிருக்கிறது. இதன் ராம் 512 எம்பி ஆகும்.

இதன் மெமரியைப் பார்த்தால் மயக்க்கூடிய அளவிற்கு 32ஜிபி வரை விரவுபடுத்தக்கூடிய அளவிற்கு 4ஜிபி இன்பில்ட் சேமிப்பை கொண்டிருக்கிறது. மேலும் மற்ற டாப்லட்டுகளில் இருக்கின்ற அத்தனை வசதிகளையும் இந்த எம் டாப் வழங்குகிறது. பீட்டல் மேஜிக் டாப்லட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எம் டாப் எல்லா வசதிகளிலும் குறைவில்லாமல் இருக்கிறது.

ரிலையன்ஸின் 3ஜி டாப்லட்டை விட இந்த எம் டாப் பல துறைகளில் முந்துகிறது. மேலும் இந்த புதிய டாப்லட் எந்த விதமான பிரச்சினை இல்லாம் சிறப்பாக இயங்கும் என்ற பலவிதமான தகவல்கள் வருகின்றன. இதில் ஹச்டிஎம்ஐ போர்ட் உள்ளதால் இதை எளிதில் ஹச்டி டிவியுடன் தொடர்பு படுத்த முடியும்.

தகவல் தொடர்புக்கு எம் டாப் முழுவதுமாக இணையதளத்தையே நம்பி உள்ளது. ஆனால் இது 3ஜி நெட்வொர்க் மற்றும் வைபை நெட்வோர்க் வசதியையும் அளிக்கிறது. இணையதள வசதிக்காக மெர்குரி நிறுவனம் 3ஜி பேக்கை இலவசமாக வழங்குகிறது. இந்த எம் டாப் இந்த செப்டம்பர் மாதம் கடைகளுக்கு வரும் என்று தெரிகிறது.

எம் டாப் 1.3 மெகா பிக்ஸல் கேமராவை வழங்குகிறது. இந்த கேமரா வீடியோ கால் செய்யவும் துணை புரியும். 7 மணி நேரம் தொடர்ந்து இயங்கக்கூடிய மல்டி வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்களையும் இந்த டாப்லட் வழங்குகிறது. மேலும் மின்திறனுக்காக இது 4000 எம்எஹச் பேட்டரியை வழங்குகிறது.

மெர்குரியின் இந்திய மேலாளர் இந்த டாப்லட் தரமாகவும் அதே நேரத்தில் சாதாரண மக்களும் வாங்கி மகிழக்கூடிய அளவில் மிக விலையில் இருக்கும் என்ற உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் எம் டாப்பின் விலை ரூ. 9499க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot