Home
Computer

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் லெனோவா கம்ப்யூட்டர்கள்

By Super
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் லெனோவா கம்ப்யூட்டர்கள்
சூப்பரான தரம் கொண்ட கணினிகளுக்கும், லேப்டாப்புகளுக்கும் லெனோவா நிறுவனம் எப்போதுமே நம்பர் ஒன்னாக இருக்கும். அந்த நிறுவனம் இப்போது திங் சென்டர் வரிசையில் புதிதாக 4 கணினிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த புதிய கணினிகள் சிறிய மற்றும் பெரிய அளவில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகளை நிறைவு செய்பவையாக இருக்கும்.

இந்த கணினிகளின் பெயர்களைப் பார்த்தால் அவை அனைத்து வசதிகளும் கொண்ட திங் சென்டர் எம்71இஸட் மற்றும் திங் சென்டர் எம்71இ மேசை கணினி ஆகும். மற்ற 2 மாடல்கள் திங் சென்டர் எம்77 மேசை கணினி மற்றும் திங்பேட் எக்ஸ்121இ நோட்புக் ஆகும்.

திங் சென்டர் எம்71ஸட்டின் முக்கிய சிறப்பு என்னவென்றால் அதன் விரைவான பூட்டிங் ஆகும். இதில் 2.0 ப்ராக்ராம்களை லெனோவா வழங்கி இருக்கிறது. இது இன்டல் கோர் ஐ3-2100 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதுபோல் இது விண்டோஸ் 7 ப்ரபசனல் இயங்கு தளத்தைக் கொண்டுள்ளதால் இதன் செயல் திறனும் மிக பக்காவாக இருக்கும்.

இதன் டிஸ்ப்ளே 20 இன்ச் கொண்ட அகன்ற திரையாகும். மேலும் இது 2ஜிபி பிசி3-10600 டிடிஆர்3 எஸ்டி ரேம் கொண்டு அது 1333 எம்ஹெர்ட்ஸ் சக்தியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் ஹார்ட் ட்ரைவ் 500ஜிபி கொண்டுள்ளது. இதில் டிவிடியை ரிக்கார்ட் செய்ய முடியும். மேலும் இது 3 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

திங் சென்டர் எம்71இ மேசை கனிணியைப் பார்த்தால் அது மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் வேலைப் பளுவை சுலபமாக்குவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கணினி 15 வினாடிகளுக்கும் பூட்டிங் ஆகிவிடும். இதில் லெனோவாவின் என்ஹேன்ஸ்டு எக்ஸ்பீரியன் 2.0 உள்ளதால் பணியாளர்கள் இந்த கனிணியை துரிதமாக பூட்டிங் செய்யலாம். மேலும் இது இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் கொண்டுள்ளதால் இது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

மூன்றாவதாக திங் சென்டர் எம்77 மேசை கனிணியைப் பார்த்தால் அது வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக வருகிறது. இது மல்டி டிஸ்ப்ளை வசதி கொண்ட எஎம்டி தொழில் நுட்பத்துடன் வருகிறது. தரத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும், வேகத்திற்கும் இந்த கனிணி உத்திரவாதம் அளிக்கும்.

இதன் விலையும் மிக நியாயமாக உள்ளது. இதில் உள்ள ப்ராசஸர்களைப் பார்த்தால் அது எஎம்டி செம்ரோன், அத்லோன் II மற்றும் பினோம் II ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுபோல் இது 16ஜிபி டிடிஆர் மெமரி சேமிப்பைக் கொண்டுள்ளது. இது 1டிபி ஹார்ட் ட்ரைவ் வசதியுடன் எடிஐ ரேடியோன் க்ராபிக்ஸுடன் வருகிறது.

விலையைப் பொறுத்தவரை திங் சென்டர் எம்71ஸட் ரூ.35000க்கும், திங் சென்டர் எம்71இ ரூ.32,000க்கும் இறுதியாக திங் சென்டர் எம்77 ரூ.27,000க்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X