Home
Computer

க்ராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் வரும் லெனோவாவின் புதிய லேப்டாப்

By Super
க்ராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் வரும் லெனோவாவின் புதிய லேப்டாப்
லேப்டாப் உற்பத்தியில் லெனோவா நிறுவனத்திற்கு சிறப்பான பெயர் உண்டு. தற்போது லெனோவா லெனோவா பி570 என்ற மலிவு விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மலிவு விலையில் வந்தாலும் இந்த லேப்டாப் பல சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. அதாவது இது விண்டோஸ் 7 புரோபசனல் இயங்குதளம் கொண்டிருக்கிறது.

லெனோவா பி570ன் டிஸ்ப்ளே 15.6 கொன்டு 1366 X 768 பிக்சல் ரிசலூசனைக் வழங்குகிறது. மேலும் இது ஒரு க்ளாசி டிஸ்ப்ளே ஆகும். இது 2310எம் கொண்ட இன்டல் கோர் ஐ3 ப்ராசஸர் கொண்டுள்ளது. இதுபோல் இதிலிருக்கும் 6 இன் 1 கார்ட் ரீடர் இந்த லேப்டாப்புக்கு மீண்டும் பெருமை சேர்க்கிறது.

இதன் ஆப்டிக்கல் ட்ரைவ் டிவிடி ஆர்டபுள்யு ரைட்டர் மற்றும் ப்ளூ-ரே டிஸ்க் கொண்டு வருகிறது. இதன் 2.0 ஸ்பீக்கர்கள் அட்டகாசமான இசையை வழங்குகின்றன.

லெனோவா பி570 0.3 மெகா பிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் தெளிவான படங்களைப் பிடிக்க முடியும். அதுபோல் இது வீடியோ சேட்டிங்கிற்கும் மிக பக்கபலமாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் 320 ஜிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது.

இஎஸ்எடிஎ போர்ட் மூலம் ஹார்ட் ட்ரைவ்களை இணைக்க முடியும். அதுபோல் லெனோவா பி570 இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் எண் கீபோர்டும் ட்ராக் பேடும் மிக அம்சமாக உள்ளன. இந்த கீபோர்டில் வேலை செய்வதற்கு மிக உற்சாகமாக இருக்கும்.

லெனோவா பி570 பல போர்ட்டுகளைக் கொண்டு வருகிறது. ஹெட்போன் மற்றும் 4 யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டுள்ளது. அதுபோல் எச்டிஎம்ஐ போர்ட், விஜிஏ மற்றும் ஆர்ஜே-45 ஜேக் ஆகியவற்றையும் கொண்டுள்ளதால் இணைப்பு வசதிக்கு இதில் பஞ்சம் இருக்காது.

மேலும் வைபை 802.11 பி/ஜி/எண் இணைப்பும் ப்ளூடூத் இணைப்பும் இதில் உள்ளதால் இதை வாங்குபவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். மேலும் இது 82579எல்எம் ஜிகாபிட் லேன் இணைப்பு கொண்டு வருகிறது. இதன் எடை 2.35 கிலோவாக இருப்பதால் இதை எங்கும் எடுத்துச் செல்வதற்கு மிக வசதியாக இருக்கும். இந்த லேப்டாப் கருப்பு நிறத்தில் மட்டுமே வருகிறது.

லெனோவா பி570ன் விலை ரூ.30,000க்குள் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X