விருது வென்ற வோஸ்ட்ரோ புதிய லேப்டாப்: டெல் அறிமுகப்படுத்துகிறது

Posted By: Staff

விருது வென்ற வோஸ்ட்ரோ புதிய லேப்டாப்: டெல் அறிமுகப்படுத்துகிறது
விருது வாங்கிய டெல்லின் வோஸ்ட்ரோ லாப்டாப்புகள் மீண்டும் உலக சந்தைக்குத் திரும்புகின்றன. அதில் முதல் அறிமுகமாக டெல் வோஸ்ட்ரோ வி131 ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த புதிய லாப்டாப் வடிவமைப்பிலும், ஸ்டைலிலும் புதுப்பிக்கப்பட்ட ஒன்றாக வந்திருக்கிறது.

இதன் எல்இடி திரையினுடைய டிஸ்ப்ளே 13.3 இன்ச் அளவுடன் ஆண்டி க்ளேர் ஹச்டியுடன் வந்திருக்கிறது. இதில் வரும் காட்சிகள் மற்றும் படங்கள் 1366X 768 பிக்ஸல் ரிசலூசனுடன் இருக்கிறது. மேலும் இந்த லேப்டாப்பை இன்டல் ஹச்டி க்ராபிக்ஸ் 300 சப்போர்ட் செய்வதால் க்ராபிக்ஸ் வேலைகளை இதில் எளிதில் செய்யலாம். டெல் வோஸ்ட்ரோ வி131 இன்டல் ஆர் கோர் ஐ3 மற்றும் ஐ5 பெற்றிருப்பதால் இதன் செயல்திறன் மிக அதிகமாக இருக்கும்.

வோஸ்ட்ரோ வி131 மிகவும் எடை குறைந்த ஒரு மெல்லிய லாப்டாப்பாகும். இது சிறந்த தகவல் தொடர்பு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதாவது இது அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 802.11 பி/ஜி/என் வைபையை வழங்குகிறது. அதேபோல் விரைவாக இயங்கக்கூடிய ப்ளூடூத் + யும் வழங்குகிறது. இதன் யுஎஸ்பி 3.0 மூலம் எளிதாக ஸ்ன்க்ரோனைசேஷன் செய்ய முடியும்.

இந்த லாப்டாப்பின் டிவைஸை ஹைப்ரீட் யுஎஸ்பி 2.0 / இஎஸ்எடிஎ கனக்டர் மற்றும் ஹச்டிஎஸ்ஐ போர்டஸ் மூலம் வேறு பெரிய மானிட்டரோடு தொடர்பு ஏற்படுத்த முடியும். மேலும் டெல் வி131 3ஜி அல்லது 4ஜி மொபைல் பேன்ட் தொடர்புகளோடு வந்திருக்கிறது. இதை டபுள்யுஐடிஐ சப்போர்ட் செய்வதால் டபுள்யுஐடிஐ மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். இந்த லாப்டாப்பின் ராம் 4ஜிபி மற்றும் 320 ஹச்டிடி ஆகும்.

லாப்டாப்பின் பாதுகாப்பிற்காக கைரேகை பதிவு வசதியும் உள்ளதால் வேறு யாரும் அனுமதி இல்லாமல் இந்த லாப்டாப்பை இயக்க முடியாது. இதன் டிஜிட்டல் பெர்சோனா சென்ஸார் இதிலுள்ள தகவல்கள் அனைத்தையும் பிரிபாலிலிருந்து காக்கிறது. மேலும் இது அப்சலூட் லோஜாக் கொண்டிருப்பதால் இது எப்போதுமே டெல்லின் 2ஜிபி ஆன்லைன் டேட்டா சேப்பில் தொடர்புடன் இருக்கும். அதனால் இதை யாராவது திருடிவிட்டால் மிக வேகமாக கண்டுபிடிக்க முடியும்.

இதன் வெப் கேம் ஹச்டி வசதியைக் கொண்டது. மேலும் மெரி கார்ட் ரீடரும் இலவசமாக வழங்கப்படுகிறது. டெல் வோஸ்ட்ரோ வி131 எஸ்ஆர்எல் ப்ரீமியம் வாய்ஸ் ப்ரோ ஒலி தொழில் நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இதில் இசை கேட்பது நமக்கு பரவசத்தைக் கொடுக்கும். இந்த லாப்டாப்பை ரூ. 30000க்கு இந்திய சந்தையில் வாங்கி மகிழலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்