3ஜி கம்பாட்டிபுள் கொண்ட புதிய இஸட்டிஇ வி9 டேப்லெட்

Posted By: Staff

3ஜி கம்பாட்டிபுள் கொண்ட புதிய இஸட்டிஇ வி9 டேப்லெட்
இஸட்டிஇ நிறுவனம் இந்திய சந்தைக்கு புதிய வி9 என்ற ஆண்ட்ராய்ட் டேப்லட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இஸட்டிஇ வி9 டேப்லட் உயர்ந்த கான்பிகரேஷன்களோடு வரும். இந்த புதிய டேப்லட் ஆன்ட்ராய்ட் ஓஎஸ் வெர்சன் 2.1 எக்ளேர் கொண்டிருக்கிறது.

இதை வெர்சன் 2.2 ஓஎஸ்ஸாக விரிவுபடுத்த முடியும். இதன் கப்பாசிட்டிவ் தொடுதிரை 7 இன்ச் அளவு கொண்டது. இதன் பிக்சல் ரிசலூசன் 480X800 ஆகும். இந்த திரையில் படங்கள் மிகத் தெளிவாக இருக்கும்.

இந்த டேப்லட் 2046X1536 பிக்ஸல் ரிசலூசன் தரக்கூடிய 3.15 எம்பி கேமராவை வழங்குகிறது. ஆனால் இதில் துணைக் கேமரா கிடையாது. அதனால் வீடியோ காலிங் செய்ய இயலாது. மேலும் மைக்ரோஎஸ்டி மெமரி கார்டுடன் சேர்த்து இது 32ஜிபி வரை விரிவுபடுத்தக் கூடிய மெமரி சேமிப்பைக் கொண்டிருக்கிறது.

மேலும் இது 512எம்பி ரேமும், 512எம்பி ரோமும் கொண்டிருப்பதால் இதன் வேகம் அதிகமாக இருக்கும். அதுபோல் இதில் மொபைல் கம்யூட்டிங்கும் மிக விரைவாக இருக்கும்.

ஸட்டிஇ வி9 3 கம்பாட்டிபிலிட்டியை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் நெட்வொர்க்கை எளிதாக பயன்படுத்த டபுள்யுஎல்எஎன் வசதியையும் வழங்குகிறது. மேலும் தகவல் பரிமாற்றத்திற்காக சின்க்ரோனைஸ் செய்யும் வசதி கொண்ட வைபை 802.11 பி/ஜி/என் வழங்குகிறது. அதுபோல் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 2.0 வையும் வழங்குகிறது.

இதன் மின்திறனை பார்த்தால் இது லை-யன் பேட்டரி 3400 எம்எஎச் கொண்டிருப்பதால் 500 மணி நேரம் தாங்கும் சக்தியைக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக ஸட்டிஇ வி9 டேப்லட் கண்டிப்பாக வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என நம்பலாம். இதன் விலையைப் பார்த்தால் ரூ.16,000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot