Home
Computer

புதிய சாமசங் பி5பி லேப்டாப்-சிறப்பு பார்வை

By Super
புதிய சாமசங் பி5பி லேப்டாப்-சிறப்பு பார்வை
டிவைஸ்களை சரியாக அப்டேட் செய்வதிலும் அவற்றை மலிவு விலையில் வழங்குவதிலும் சாம்சங்கை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லாலாம். அந்த அளவிற்கு சரியா கால இடைவெளியில் தனது டிவைஸ்களை சாம்சங் அப்டேட் செய்கிறது.

அதுபோல் புதிய டிவைஸ்களையும் அறிமுகப்படுத்துகிறது. அதனால், வாடிக்கையாளர்களும் சாம்சங்கின் தயாரிப்புகளை அதிகம் நேசிக்கின்றனர். அதனால் சாம்சங் தனது போட்டியாளர்களுடன் சரியான அளவில் போட்டி போட முடிகிறது.

தற்போது சாம்சுங் சாம்சுங் 600 பி5பி என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது அதி நவீன தொழில் நுட்பத்துடன் வருகிறது. குறிப்பாக வேலையில் இருப்போரையும் வியாபாரத்தில் ஈடுபடுவோரையும் மையமாக வைத்தே இந்த லேப்டாப் வருகிறது. இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. இது இண்டல் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இது கருப்பு நிறத்தில் ப்ளாஸ்டிக்கில் வருகிறது.

இந்த சாம்சுங் 600 பி5பியின் செயல் திறன் மிக பக்காவாக இருக்கும். இதன் திரை 15.6 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த திரை மேட் கோட்டிங் கொண்டுள்ளதால் இதில் பிரதிபலிப்பும் எதிரொலிப்பும் இருக்காது. அதனால் கண்கள் கூசாது. இதன் கீபோர்டு கவர்ச்சியாக இல்லை என்றாலும் அது வேலை செய்ய சிறப்பாக உள்ளது. இதன் மெமரி 4ஜிபி ஆகும். மேலும் இதன் எடை 2.5 கிலோவாகும்.

இந்த லேப்டாப் டிவிடி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் எர்த்நெட் போர்ட் கொண்டுள்ளது. இதன் பேட்டரி நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது. அதுபோல் இந்த லேப்டாப்பின் பாதுகாப்பு வசதியும் மிக அருமையாக உள்ளது. இதன் விலையைப் பார்த்தால் அது ரூ. 30,000க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X