நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய எல்ஜி லேப்டாப்

இந்த லேப்டாப் ஏராளமான வசதிகளுடன் வருகிறது. இந்த லேப்டாப்பின் கம்யூட்டிங் மிக விரைவாக இருக்கும். மேலும் இதில் 2ஜி க்வாட் பவர் இருக்கிறது. மேலும் பார்ப்பதற்கும் மிக ஸ்டைலாக இருக்கிறது.
எல்ஜி எ 520 3டி லேப்டாப் விண்டோஸ் 7 ப்ரபசனல் கொண்டு 64-பிட் ப்ராசஸருடன் வருகிறது. இது 2ஜி இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் கொண்டு வருவதால் இதன் செயல்திறன் மிக பக்காவாக இருக்கும்.
இதன் திரை 15.6 அளவு கொண்ட 3டி எல்இடி எல்சிடி உயர்தர டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இதன் சேமிப்பு 8ஜிபி ஆகும். அதுபோல் இது 750ஜிபி ஹார்ட் ட்ரைவைக் கொண்டுள்ளது. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக என்விடியா க்ராபிக்ஸ் மெமரி கார்டும் உள்ளது.
எல்ஜி எ 520 3டி லேப்டாப் 5 இன் 1 மல்டிமீடியா கார்டு ஸ்லாட் கொண்டு வருவதால் சூப்பரான மல்டி மீடியா அனுபவத்தைத் தரும். வைபை 802.11/பி/ஜி/என் கொண்டிருப்பதால் இணைப்பு வசதியும் மிக பக்காவாக இருக்கும். இதன் எடை 2.70 கிலோ மட்டுமே.
அதனால் இதை எடுத்துச் செல்வதற்கும் மிக எளிதாக இருக்கும். அதுபோல் ப்ளூடூத் இணைப்பு சிறப்பாக உள்ளதால் தகவல் பரிமாற்றம் செய்ய வசதியாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் கேரேகை பிரிண்ட் ரீடர் கொண்டு வருவதால் வெளியாட்கள் யாரும் நம்மை அறியாமல் இந்த லேப்டாப்பை பயன்படுத்த முடியாது.
எல்ஜி எ 520 3டி லேப்டாப்பின் மற்ற வசதிகளைப் பார்த்தால் அது சிறப்பான இன்டிக்கேட்டரையும் அதே நேரத்தில் 2டியிலிருந்து 3டிக்கான கன்வேர்சனையும் கொண்டுள்ளது. இதன் ரேம் 4ஜிபி டிடிஆர்3 ஆகும். இதன் 1.3 மெகா பிக்சல் வெப்காம் வீடியோ சேட்டிங் செய்வதற்கும் மிக பக்கபலமாக இருக்கும்.
மேலும், இந்த லேப்டாப் 2600 எம்எஎச் மின் திறன் கொண்ட 6 செல் கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டள்ளதால் இதில் பல மணி நேரம் வேலை செய்தாலும் இதன் பேட்டரி தாங்கும் சக்தி கொண்டது.
எல்ஜி எ 520 3டி லேப்டாப்பின் விலையைப் பார்த்தால் அது ரூ.50,000 மற்றும் ரூ.60,000 விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் சாதனை படைக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications