Home
Computer

மல்லுக்கட்டப் போகும் எச்பி எலைட்புக் மற்றும் ஆப்பிள் மாக்புக் ஏர்

By Super
மல்லுக்கட்டப் போகும் எச்பி எலைட்புக் மற்றும் ஆப்பிள் மாக்புக் ஏர்
எல்லா அல்டராபுக்குகள் மற்றும் டேப்லட்டுகளுக்கும் மத்தியில் ஆப்பிளின் மாக்புக்கிற்கு அதிக மோகம் இருக்கிறுது. ஆனால் எச்பி அந்த ஆப்பிளின் மாக்புக்கை வீழ்த்த புதிய உத்தியை வைத்திருக்கிறது. அதாவது ஆப்பிளின் மாக்புக்கிற்கு போட்டியாக எலைட்புக் 2560 என்ற டேப்லட்டை களமிறக்க இருக்கிறது. இந்த எலைட் 2560 ஒரு அல்ட்ரா போர்ட்டபுள் டிவைஸ் ஆகும். இது எச்பியின் அல்ட்ரா போர்ட்டபுள் டிவைஸ்களான 2540பி, 2530பி மற்றும் 2510பி ஆகியவற்றின் தொடர்ச்சியாக வருகிறது.

எச்பி எலைட்புக் 1.08 இன்ச் தடிமனும் 3.7 பவுண்ட் எடையும் கொண்டிருக்கிறது. ஆனால் ஆப்பிளின் மாக்புக் ஏர் 0.68 இன்ச தடிமனும் 2.4 பவுண்ட் எடையும் கொண்டுள்ளது. இரண்டு அல்ட்ரா புக்குகளுமே அலுமினியம் சேசிஸ் கொண்டிருந்தாலும் எலைட்புக் மக்னீசியம் கொண்டிருக்கிறது. அதுபோல் எலைட்புக் கோர் ஐ5 சாண்டி பிரிட்ஜ் 2410எம் 2.3ஜிஹர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாக்புக் இண்டல் கோர் 2 டூவோ யுஎல்வி 1.6ஜிஹர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டு எலைட்புக்கை விட வேகமாக இயங்குகிறது.

எலைட்புக்கின் டிஸ்ப்ளே 12.5 இன்ச் ஆகும். அதுபோல் மாக்புக் ஏர் 11.6 இன்ச் ட்ஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. எலைட்புக்கின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது 3ஜி தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் பயனத்தின்போது இதை தாராளமாக பயன்படுத்தலாம். இரண்டுமே 8 மணி நேரம் தாங்கக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்கிறது. எலைட்புக் ஆப்டிக்கல் ட்ரைவ்களைக் கொண்டுள்ளது. ஆனால் மாக்புக் அதைக் கொண்டிருக்கவில்லை. இந்த இரண்டின் கீபோர்களுமே மிக அட்டகாசமாக இருக்கின்றன.

இவற்றின் டச்பேடைப் பொறுத்தவரை மாக்புக் அகலமாகவும் அதே நேரத்தில் மல்டி ஜெஸ்ட்சர் வசதியும் கொண்டுள்ளது. ஆனால் எலைட்புக்கில் டச்பேட் சிறியதாக இருக்கிறது. அதுபோல் எலைட் புக்கில் ஸ்க்ரோல் செய்வது சற்று கடினமாக இருப்பதால் ஒரு சில நேரங்களில் நமக்கு அது எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் மாக்புக்கிற்கு டோக்கிங் ஸ்டேஷன் கிடையாது. ஆனால் எலைட்புக்கில் அந்த வசதி உள்ளதால் அதை எங்கு வேண்டுமானாலும் நமது ஐபோடோடு எடுத்துச் செல்லலாம்.

மற்ற ஹார்வேர்களைப் பொருத்தமட்டில் எலைட்புக்கை விட மாக்புக் ஏரை ஒரு அல்ட்ரா போர்ட்டபுள் டிவைஸ் என்று அழைக்கலாம். ஏனெனில் மாக்புக் 128ஜிபி எஸ்எஸ்டி கொண்டிருப்பதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். ஆனால் எலைட்புக் 320ஜிபி எச்டிடி மட்டுமே கொண்டுள்ளதால் இதன் வேகம் மாக்புக்கை விட மெதுவாகவே இருக்கும். ஆனால் இரண்டுமே 4ஜிபி ரேம் மற்றும் யுஎஸ்பி டிஸ்ப்ளே போர்ட்டுகளைக் கொண்டிருக்கின்றன.

எச்பி எலைட்புக்கின் விலை இந்தியாவில் ரூ.54,000 ஆகும். அதே நேரத்தில் ஆப்பிளின் மாக்புக் ஏரின் விலை ரூ.62,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X