அதிரடி இசைக்கு போஸ் சவுண்ட்பார் சிஸ்டம்

By Super
|
அதிரடி இசைக்கு போஸ் சவுண்ட்பார் சிஸ்டம்
புதிதாக 2 சவுண்டபார் ஆடியோ சிஸ்டங்களை போஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இவை மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ் லைப்ஸ்டைல் 135 மற்றும் போஸ் சினிமேட் 1 எஸ்ஆர் என்ற பெயர்களில் இந்த சவுண்ட்பார் ஆடியோ சிஸ்டம்கள் மார்க்கெட்டிற்கு வருகின்றன.

போஸின் டிவைஸ்களுக்கு எப்போதுமே வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பு இருக்கிறது. அந்த விதத்தில் போஸின் இந்த புதிய படைப்புகளும் பீடு நடை போடும் என நம்பலாம்.

போஸ் லைப்ஸ்டைல் 135 சிறந்த டிஸைனைக் கொண்டிருக்கிறது. இது 4 எச்டிஎம்ஐ இன்புட்களை சமாளிக்கும் திறன் வாய்ந்தது. மேலும் இது எப்எம் மற்றும் எம் ட்யூனர் மற்றும் ஐபோட் டோக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் போஸ் சினிமேட் 1 எஸ்ஆர் எளிமையான டிசைனுடன் ஆனால் பக்காவான ஒலி அமைப்புடன் வருகிறது.

இந்த சிஸ்டத்திற்கு ஒரே ஒரு கேபிள் இருந்தால் போதும். இந்த ஸ்பீக்கர்களை சுவர்களிலோ அல்லது நமக்கு விருப்பமான இடங்களிலோ எளிதாக மாட்டி வைக்க முடியும். இந்த சவுண்ட்பார் சிஸ்டம் ப்ளக்ஸ்மவுண்ட் ஆட்டோமேட்டிக் ப்ளேஸ்மென்ட் தொழில் நுட்பம் கொண்டுள்ளதால் இவற்றை நமது அறையின் எந்த இடத்திலும் வைக்க முடியும். மேலும் இந்த சிஸ்டம்கள் ரிமோட் கண்ட்ரோல் கொண்டுள்ளதால் இருந்த இடத்தில் இருந்தே இதை இயக்க முடியும்.

இந்த இரண்டு சவுண்ட சிஸ்டம்களும் புதுமையான பேஸ்கைட் என்ற ஒலி ரேடியேட்டர் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இவை ட்ருஸ்பேஸ் டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸிங் வசதியையும் இது வழங்குகிறது. இந்த சிஸ்டம்களின் அளவைப் பார்த்தால் அது 6.1X93.5X12.4Xசெமீ. ஆகும்.

இந்த இரண்டு சவுண்டபார் சிஸ்டமும் அடக்கமான அளவுடன் சூப்பரான தரத்துடன் வருகின்றன. படம் பார்த்தாலும், வீடியோ கேம் விளையாண்டாலும், அல்லது இதில் இசை கேட்டாலும இதில் இருந்த வருகின்ற ஒலி அமைப்பு மனதை மயக்கும் அளவில் மிக ரம்மியமாக இருக்கிறது.

விலையைப் பார்த்தால் போஸ் லைப்ஸ்டைல் 135 சவுண்ட்பார் ரூ.120000க்கும், போஸ் சினிமேட் 1 எஸ்ஆர் ரூ.75000க்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X