ஏஸர் ஐகோனியா டேப் ஏ-500 மற்றும் ஐபேட்-2: ஒரு ஒப்பீடு

By Super
|
ஏஸர் ஐகோனியா டேப் ஏ-500 மற்றும் ஐபேட்-2: ஒரு ஒப்பீடு
இந்திய டாப்லட் சந்தையில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதாவது டாப்லட்களின் தேவை அதிகமாக இருப்பதால் பன்னாட்டு மொபைல் நிறுவனங்களும் இந்திய மொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தமது தயாரிப்பகளை வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வீசுகின்றனர். அதே நேரத்தில் விமர்சனங்களும் அதிகம் வருவதால் தரமான டாப்லட்களை வழங்குவதில் எல்லா நிறுவனங்களும் அதிக அக்கறை காட்டுகின்றன.

அந்த வரிசையில் ஏஸர் நிறுவனம் ஆப்பிளின் ஐபேட் 2 வைபைக்கு போட்டியாக ஏஸர் ஐகோனியா டாப் எ500 என்ற டாப்லட்டை களமிறக்கியிருக்கிறது. அதே நேரத்தில் ஆப்பிளின் ஐபேட் 2 எப்பொழுதுமே வாடிக்கையாளர்களை ஏமாற்றாத விதத்தில் வந்துள்ளது. இதன் முக்கிய சிறப்புகள் எண்ணிலடங்காதவை.

அதாவது இது எல்இடி டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் 16எம் வண்ணங்களை சப்போர்ட் செய்யும் விதத்தில் 768 X 1024 பிக்ஸல் ரிசலூசனுடன் வந்துள்ளது. அதே நேரத்தில் ஏஸரின் ஐகோனியா டாப் எ500ம் எல்சிடி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் 10.1 இன்ச் அளவில் 800 X 1280 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் தற்சுழற்சிக்கான அக்ஸிலரோமீட்டர், தானாக நிறுத்துவதற்கு ப்ராக்ஸிமிட்டி சென்சாரும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆப்பிளின் ஐபேட் 2 கைரேகை மறும் கீறல்களிலிருந்து டாப்லட்டை காப்பதற்காக ஒலிசோ போபிக் சர்பேஸ் மற்றும் ஜிரோ சென்சார் மற்றும் 3 அக்ஸிஸ் சென்சார் போன்ற வசதிகளை வழங்குகிறது.

மெமரி சேமிப்பு வசதியைப் பார்த்தால் ஆப்பிள் ஐபேட் 16/32/64 ஜிபியைக் கொண்டுள்ளது.மேலும் விரிவுபடுத்துவதற்கு தேவையான் எக்ஸ்டர்னல் மெமரி வசதியையும் வழங்குகிறது. அதே நேரத்தில் ஏஸர் 32ஜிபி வரை விரவுபடுத்தக்கூடிய மெமரி சேமிப்பு வசதியுடன் கூடிய எக்ஸ்டர்னல் மைக்ரோஎஸ்டியை வழங்குகிறது.

ஏஸரின் ஐகோனியா டாப் ஆட்டோபோக்கஸ் மற்றும் எஸ்இடி ப்ளாஸ் வசதியுடன் 2592 X 1944 பிக்ஸல் வழங்கும் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் ஐபேட் 2 டாப்லட் 960 X 720 பிக்ஸலுடன் கூடிய 0.7எம்பி கேமராவை வழங்குகிறது. இரண்டு டாப்லட்டுகளும் சிறந்த திறமுள்ள 1ஜிஹச்ஸட் இரட்டை கோர் எஆர்எம் கார்டக்ஸ் எ9 ப்ராஸஸரை வழங்குகின்றன.

ஆப்பிள் ஆப்பிளின் எ5 ஜிப்செட்டையும் ஏஸர் டேக்ரா 2டி20 ஜிப்செட்டையும் கொண்டிருக்கின்றன. மேலும் இரண்டு டாப்லட்டுகளுமே எம்பி3 மற்றும் எம்பி4 பைல்களை இயக்க்கூடிய டிஜிட்டல் கம்பாஸை பெற்றுள்ளன. மேலும் ஏஸர் எம்எஸ் ஆபிஸையும் மற்றும் ஜிடாக், யுடியூப் போன்ற ஆன்லைன் வசதிகளையும் தருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X