யூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்!

  யூ டியூப் இணைய தளத்தில் ஹை ஆன் லைஃப் (High on Life) என்னும் பிரிவில் சாகச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும். சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத வீர தீரச் செயல்களின் வீடியோ பதிவுகள் அனைவருடைய மனதையும் கவரக் கூடிய வகையில் இருக்கும். இந்த வீடியோக்களை இலட்சக் கணக்கானோர் விரும்பிப் பார்க்கின்றனர். இதனைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ரைகர் கேம்பிள் (Ryker Gamble ) என்னும் பெயர் மிகவும் பரிட்சயமானதாக இருக்கும். கனடா நாட்டைச் சேர்ந்த இவருடைய சாகச வீடியோக்கள் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இவர், ஜீலை 3 ஆம் தேதி கனடாவில் உள்ள அருவி ஒன்றின் உச்சியிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார் என்னும் செய்தி அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  யூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்!

  கனடா நாட்டில், பிரிட்டிஷ் கொலம்பியா என்னும் பகுதியில் அமைந்துள்ள உயரமான அருவியின் உச்சியில் சாகசம் செய்து கொண்டிருந்த போது ரைகர் கேம்பிள் தவறி விழுந்து இறந்துவிட்டார். இவருக்கு 30 வயதுதான் ஆகிறது.

  உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று சாகசங்களை நிகழ்த்தி, அந்த வீடியோவை ஹை ஆன் லைஃப் (High on Life) என்னும் இணையதளப் பகுதியில் பதிவேற்றம் செய்து வந்த ரைகர் கேம்பிள் மற்றும் அவருடன் சாகசம் நிகழ்த்த முயன்ற இரண்டு நண்பர்களும் இறந்துவிட்டடதாக போலீசாரால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை கனடாவின் அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ளது.

  யூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்!

  பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள மூன்றாவது மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான ஷான்னான் அருவியில் (Shannon Falls) சாகசம் நிகழ்த்த முயன்றபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அசோசியேட் பிரஸ் தெரிவிக்கிறது.

  அருவியின் உச்சியில் நீந்திய பிறகு, ரைகர் கேம்பிள் மற்றும் அவருடைய இரு நண்பர்களும் தொங்கு பாறை ஒன்றின் மீது நடந்தபோது மூவரும் தவறி விழுந்தனர். ஏறக்குறைய 100 அடி உயரத்தில் இருந்து அவர்கள் விழுந்தனர். நடக்கும் போது தவறி விழுந்த மேகன் (Megan) என்னும் பெண் தோழியை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தபோது ரைகர் கேம்பிள், அலெக்ஸி ஆகிய இருவரும் மேகனோடு சேர்ந்து விழுந்து இறந்திருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

  யூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்!

  யூ டியூப்பில் 5,00,000 சந்தாதாரர்களையும், இன்ஸ்டாகிராமில் 11 இலட்சம் சந்தாதாரர்களையும் பெற்றுள்ள ஹை ஆன் லைஃப் என்னும் வீடியோ இணையதளப் பகுதியில் ரைகர் கேம்பிள் குழுவினரின் சாகசங்களுக்கு மிக அதிக வரவேற்பு உள்ளது. தடைகளைத் தாண்டி அசுர வேகத்தில் ஓடுதல், மலை உச்சியிலிருந்து குதித்தல், உயரமான இடத்தில் இருந்து கயிறில் தொங்குதல், அருவியில் சறுக்கி விளையாடுதல், ஆபத்தான நீர் நிலைகளில் படகுப் பயணம் என இவர்களின் சாகசங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பை ஏற்படுத்தும்.

  “ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும் எங்களுடைய வீடியோப் பதிவுகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். உலகத்தின் அறியாத பகுதிகள் குறித்த தேடலை அதிகப்படுத்தும்” என யூ டியூப் இணையதள நிறுவனம் கூறுகிறது.

  யூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்!

  யூ டியூப் நிறுவனத்தின் ஒரு அலை வரிசையான ஹை ஆன் லைஃப் தளத்தில் சாகச வீடியோக்கள் மட்டும் இன்றி, உலகத்தின் மிக முக்கியமான தேசியப் பூங்காக்கள், பூமியில் இயற்கையாய் அமைந்துள்ள ஆச்சரியமூட்டும் இடங்கள் ஆகியவை பற்றிய வீடியோக்களும் இடம் பெறுகின்றன. ரைகர் கேம்பிளின் நெருங்கிய தோழியான அலிஸா ஹென்சன் ரைகரின் மறைவு குறித்து உருக்கமான பதிவினை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டுள்ளார்.

  யூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்!

  ரைகர் கேம்பிள் (Gamble ) தன்னுடைய பெயருக்கு ஏற்றார்போலத் தன்னுடைய வாழ்க்கையை சாகச விளையாட்டுக்காகப் பணயம் வைத்து இழந்துவிட்டார். சாகசங்கள் பல நிகழ்த்திய இவரால் சாவை வெல்ல முடியவில்லை. தன்னுடைய முப்பது வயதிற்குள்ளாகவே தன்னுடைய சாகசங்களுக்கு முடிவுரை எழுதியது அவர்களுடைய ரசிகர்களையும், குடும்பத்தினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

  English summary
  YouTube star Ryker Gamble from High On Life dies after falling from waterfall : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more