Home
Camera

சோலார் பேனல் உடன் புதிய கேமராவை அறிமுகம் செய்த Xiaomi.. 9900mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஷாவ்மீ நிறுவனம் தனது புதிய ஷாவ்மீ ஸ்மார்ட் சோலார் கேமரா 4 ப்ரோ 4ஜி (Xiaomi Smart Solar Camera 4 Pro 4G) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு டூயல் கேமரா எடிஷன் ஆகும். குறிப்பாக இந்த செக்யூரிட்டி கேமரா விரைவில் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஷாவ்மீ ஸ்மார்ட் சோலார் கேமரா 4 ப்ரோ 4ஜி அம்சங்கள் (Xiaomi Smart Solar Camera 4 Pro 4G specifications): இந்த புதிய ஷாவ்மீ ஸ்மார்ட் சோலார் கேமரா 4 ப்ரோ மாடல் ஆனது 4ஜி சிம் கார்டு ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே வீடியோக்களைப் பார்ப்பதற்கு நீங்கள் வைஃபை-ஐ சார்ந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக இந்த கேமராவின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சோலார் பேனல் உடன் புதிய கேமராவை அறிமுகம் செய்த Xiaomi.. என்ன விலை?

இந்த கேமராவில் 9900எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. ஆகவே இது ஒரே சார்ஜில் ஒரு வாரத்திற்கும் மேலாக பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் 7.6W சோலார் பேனல் உடன் இந்த ஷாவ்மீ ஸ்மார்ட் சோலார் கேமரா 4 ப்ரோ 4ஜி மாடல் வெளியாகி உள்ளது. எனவே சாதாரண சூரிய ஒளி நிலைகளில் இது காலவரையின்றித் தொடர்ந்து இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாவ்மீ ஸ்மார்ட் சோலார் கேமரா 4 ப்ரோ 4ஜி மாடலில் டூயல் 5எம்பி கேமராக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 3கே ரெசல்யூஷனில் வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டவை. மேலும் இந்த இரண்டு லென்ஸ்களிலும் f/1.6 என்ற பெரிய அபெர்ச்சர் உள்ளது. மேலும் ஒரு நபர் கண்டறியப்படும்போது அதற்கேற்ற ஃபில் லைட்டை ( fill light) ஒளிரச் செய்யும் ஒயிட் லைட் + இன்பிராரெட் லைட் (infrared light) ஆதரவுகளும் இதில் உள்ளது.

எனவே இந்த கேமரா மூலம் தெளிவான வீடியோக்களை பதிவு செய்ய முடியும். குறிப்பாக ஆல்வேஸ்-ஆன்-வீடியோ (Always-On Video) இன்டெலிஜென்ட் ரெக்கார்டிங் ஆதரவும் இந்த புதிய ஷாவ்மீ கேமராவில் உள்ளது. அதாவது யாரும் இல்லாதபோது, ​​இது ஒவ்வொரு 2 வினாடிக்கும் 1 பிரேம் என்ற விகிதத்திற்குக் குறைந்து, 90%-க்கும் அதிகமான சேமிப்பக இடத்தை மிச்சப்படுத்துகிறது.

சந்தேகத்திற்கிடமான ஏதேனும் செயல்பாடு கண்டறியப்பட்டால், இந்த கேமரா ஒலியுடன் கூடிய எச்சரிக்கை அலாரத்தை இயக்குவதுடன், மின்னும் எச்சரிக்கை லைட்டிங்கை செயல்படுத்தும். மேலும் Mi Home செயலி மூலம் பயனரின் மொபைல் போனுக்கு உடனடி அறிவிப்பையும் அனுப்பும். அதேபோல் இதில் டூ-வே வாய்ஸ் கால்ஸ் (two-way voice calls) சப்போர்ட் இருப்பதால், செக்யூரிட்டி கேமராவின் அருகில் இருப்பவருடன் நீங்கள் நேரடியாகப் பேசலாம்.

சோலார் பேனல் உடன் புதிய கேமராவை அறிமுகம் செய்த Xiaomi.. என்ன விலை?

ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் ஒருங்கிணைப்பதற்காக ஹைப்பர்கனெக்ட் (HyperConnect) ஆதரவு ஷாவ்மீ ஸ்மார்ட் சோலார் கேமரா 4 ப்ரோ 4ஜ மாடலில் உள்ளது. அதேபோல் IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த அட்டகாசமான செக்யூரிட்டி கேமராவில் உள்ளது.

ஷாவ்மீ ஸ்மார்ட் சோலார் கேமரா 4 ப்ரோ 4ஜி மாடலின் விலை 579 yuan (இந்திய மதிப்பில் ரூ.8,052)-ஆக உள்ளது. வரும் ஜூலை 6 ஆம் தேதி இந்த கேமரா சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த கேமரா வெளியாகி உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Solar Camera 4 Pro 4G Launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X