Home
Camera

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. 256ஜிபி மெமரி.. நைட் விஷன்.. அறிமுகானது Xiaomi செக்யூரிட்டி கேமரா.. என்ன விலை?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி ஸ்மார்ட் அவுட்டோர் கேமரா 4 ப்ரோ (Xiaomi Smart Outdoor Camera 4 Pro) மாடலை அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு, ட்ரிபிள் 4கே லென்ஸ், நைட் விஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி கேமரா வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சியோமி சியோமி ஸ்மார்ட் அவுட்டோர் கேமரா 4 ப்ரோ மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி ஸ்மார்ட் அவுட்டோர் கேமரா 4 ப்ரோ அம்சங்கள் (Xiaomi Smart Outdoor Camera 4 Pro specifications): மூன்று 5 மெகாபிக்சல் சென்சார்கள் உடன் இந்த சியோமி ஸ்மார்ட் அவுட்டோர் கேமரா 4 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. இதில் ஒவ்வொரு சென்சாரும் 2880×1620 பிக்சல்ஸ் மற்றும் 3கே அல்ட்ரா-க்ளியர் ரெசல்யூஷனில் பதிவு செய்யும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. அறிமுகானது Xiaomi செக்யூரிட்டி கேமரா..

அதேபோல் மூன்று லென்ஸ்களும் f/1.6 அபெர்ச்சர் பயன்படுத்துகின்றன. இதனால் குறைந்த வெளிச்ச உள்ள பகுதிகளில் கூட தெளிவான படங்களை பதிவு செய்ய முடியும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஃப்ராரெட் ரெட் மற்றும் ஒயிட் எல்இடி ஆதரவுகளுடன் இந்த புதிய சியோமி கேமரா வெளிவந்துள்ளது. இது இரவு நேரங்களில் ஒரு நபரை கண்டறிந்ததும் இந்த எல்இடிகள் தெளிவாகப் படம்பிடிக்க உதவுகிறது.

இந்த சியோமி ஸ்மார்ட் அவுட்டோர் கேமரா 4 ப்ரோ கேமராவில் உள்ள AI அம்சம் உங்கள் வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது. குறிப்பாக இந்த கேமராவின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

வைட்-ஆங்கிள், 4மிமீ ஷார்ட்-ஃபோகஸ் மற்றும் 12மிமீ லாங்-ஃபோகஸ் லென்ஸ்கள் ஆகியவற்றின் கலவையின் மூலம் 9x ஹைப்ரிட் ஜூமை ஆதரிக்கிறது இந்த கேமரா. அதேபோல் இதன் லென்ஸில் மோட்டார் பொருத்தப்பட்ட கிம்பல் கண்ட்ரோல் (gimbal control) இருக்கிறது. இதனால் பயனர்கள் Mi Home ஆப் மூலம் கேமராவை தொலைவிலிருந்து சரிசெய்ய அனுமதிக்கிறது.

IP66 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் சியோமி ஸ்மார்ட் அவுட்டோர் கேமரா 4 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இது கடுமையான வெளிப்புற சூழல்களில் பயன்படுத்த ஏற்றதாக அமைகிறது. டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.0, ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த கேமராவில் உள்ளன.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. அறிமுகானது Xiaomi செக்யூரிட்டி கேமரா..

256 ஜிபி வரை மெமரி கார்டு பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதுதவிர கிளவுட் ஸ்டோரேஜ் ஆதரவும் இந்த கேமராவில் உள்ளது. 2-வே ஆடியோ கம்யூனிகேஷன், டூயல் ஆங்கிள் டைம் லேப்ஸ் போட்டோகிராபி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த புதிய சியோமி ஸ்மார்ட் அவுட்டோர் கேமரா 4 ப்ரோ மாடலில் உள்ளன. மேலும் ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) மூலம் இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா இயங்குகிறது.

ஆனால் சியோமி ஸ்மார்ட் அவுட்டோர் கேமரா 4 ப்ரோ மாடல் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கேமரா ஆனது அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய சியோமி கேமராவின் விலை 449 yuan (இந்திய மதிப்பில் ரூ.5,481)-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த கேமரா வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Outdoor Camera 4 Pro launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X