சியோமி அறிமுகம் செய்த புதிய செக்யூரிட்டி கேமரா.. நைட் விஷன்.. 256ஜிபி மெமரி.. AI அம்சம்.. என்ன விலை?
சியோமி நிறுவனம் தற்போது உலக சந்தையில் சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 (Xiaomi Smart Camera C500) மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. விரைவில் இந்த கேமரா இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த செக்யூரிட்டி கேமரா மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 அம்சங்கள் (Xiaomi Smart Camera C500 specifications): இந்த புதிய சியோமி செக்யூரிட்டி கேமரா 3.5கே அல்ட்ரா எச்டி (3.5K UHD) ஆதரவைக் கொண்டுள்ளது . மேலும் 3,200 x 1,800 பிக்சல்ஸ் தரும் 6எம்பி புரபசனல் கிரேடு லென்ஸ் (6MP professional-grade lens) இதில் உள்ளது. எனவே இந்த கேமரா துல்லியமாகப் படங்களை பதிவு செய்யும்.
அதேபோல் 360 டிகிரி ஹரிசாண்டல் (360 ° horizontal), 178 டிகிரி வெர்டிக்கல் வியூ ஆங்கிள் (116° vertical viewing angle) ஆதரவை வழங்குகிறது இந்த சியோமி கேமரா. பின்பு சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 மாடலில் 1/2.45-இன்ச் இமேஜ் சென்சார் உள்ளது. இது இரவு நேரங்களில் அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் தெளிவான வீடியோக்களை பதிவு செய்ய உதவும்.
மேலும் (116° vertical viewing angle) ஆதரவைக் கொண்டுள்ளது புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 மாடல். அதேபோல் இந்த புதிய சியோமி கேமராவில் மேம்பட்ட AI அம்சங்கள் உள்ளன. இது வீட்டில் உள்ள நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது, இதன் மூலம் தெரியாத நபர்கள் மட்டும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கை நோட்டிபிகேஷனை உரிமையாளருக்கு அனுப்புகிறது.
குறிப்பாக இது இரண்டு வழி கம்யூனிகேஷனை உறுதி செய்கிறது. அதாவது இந்த செக்யூரிட்டி கேமரா மூலம் உங்கள் வீட்டிற்கு வரும் நபர்களுடன் நீங்கள் பேசலாம். அதேபோல் சியோமி நிறுவனத்தின் சொந்த MJA1 செக்யூரிட்டி சிப்செட் உடன் சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 மாடல் வெளிவந்துள்ளது. இது பாதுகாப்பான கிளவுட் பரிமாற்றங்களை வழங்குகிறது.
அதுவும் ப்ளூடூத் 5.0 மற்றும் வைஃபை 6 கனெக்டிவிட்டி ஆதரவுடன் புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 256ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுதத் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ள இந்த சியோமி செக்யூரிட்டி கேமரா. இதுதவிர கிளவுட் ஸடோரேஜ் ஆதரவும் இந்த சியோமி கேமரா மாடலில் உள்ளது.

அமேசான் அலெக்சா (Amazon Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 மாடல். அதேபோல் சியோமி ஹைப்பர் ஓஎஸ் கனெக்ட் (HyperOS Connect) மூலம் இந்த சியோமி செக்யூரிட்டி கேமரா இயங்குகிறது. கிம்பல் மவுண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி கேமரா. குறிப்பாக வெள்ளை நிறத்தில் இந்த செக்யூரிட்டி கேமரா வெளிவந்துள்ளது.
சியோமி ஸ்மார்ட் கேமரா சி500 மாடலின் விலை £38.99 (இந்திய மதிப்பில் ரூ.4,717)-ஆக உள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் இந்த கேமரா விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








